யாழில் 19வயது சிறுவனுக்கு 21 வயது குமரிமீது கதல் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்ததால் காதலர்கள் கிணற்றில் பாய்ந்துள்ளனர். இச் சம்பவத்தில் 19வயதான பால்குடி காதலன் உயிரிழந்துள்ளார். காதலி கிணற்றிலுள்ள குழாயை பிடித்து உயிர் தப்பியுள்ளார்.
கோப்பாய் தெற்கைச் சேர்ந்த சிவபாதம் தினேஸ்குமார் (வயது 19)இ யோகராசா அனுசியா (வயது 21) ஆகியோரே இன்று காலை கிணற்றில் பாய்ந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் ஒருவருடமாக காதலித்து வந்ததாகவும்இ காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.