நீண்டகாலமாக புரையோடிப்யோருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள் பகிரப்பட்ட இறையாண்மையில் அதியுச்ச சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றே அவசியமாகும். இதனையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஒற்றை ஆட்சிக் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சூளுரைத்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடக்கூடாது. முஸ்லிம்களையும் அரவணைத்துக்கொண்டு சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளாது நீடித்த நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளவேண்டும். எமது மக்கள் ஏற்காத எதனையும் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லையென்பது உறுதியானதெனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் விடேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.

காலை ஆரம்பமான இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர்கள், வடக்கு கிழக்கை பிரதிநிதிதித்துப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வட மாகாணசபை ததேகூ உறுப்பினர்கள்- முதலமைச்சர் சந்திப்பில் ‘இணக்கம்’

21-01-2016

150901114329_c_v_vigneswaran_512x288_bbc_nocreditஇலங்கையில் வடக்கு மாகாணசபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று புதனன்று மாலை அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பில் சர்ச்சைக்குரியதாக இருந்த பல விடயங்களில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வினைத்திறன் மிக்க ஒரு சபையாக வடமாகாண சபையை செயற்படுத்துவது, தமிழ் மக்கள் பேரவையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இணைந்து கொண்டிருப்பது, அரசியல் தீர்வுக்கான விடயத்தில் வடமாகாண சபையின் பங்களிப்பு ஆகிய விடயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

வினைத்திறன் மிக்க சபையாக வடமாகாண சபையை செயற்படுத்துவது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒருவரான சிவாஜிலிங்கம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவது குறித்த விடயத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயற்படுவது முரணான நிலைப்பாடாகும் சுட்டிக்காட்டப்பட்டு உறுப்பினர்கள் சிலரால் விளக்கம் கோரப்பட்டிருந்தது. அதற்குரிய விளக்கத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தக் கூட்டத்தில் அளித்திருந்தார்.

‘தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைவராக செயற்படுவதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதன் ஏற்பாட்டாளர்கள் இந்தப் பேரவை அரசியல் கட்சியாக மாற்றமுறாது, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிராகச் செற்படாது, தமிழ் மக்களின் உரிமை நலன்களுக்காகக் குரல் கொடுப்பதே பேரவையின் நோக்கம் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்பே அதில் இணைந்து’ செயற்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், வடமாகாண சபைக்கான தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளையே தமிழ் மக்கள் பேரவையும் முன்னெடுக்கவுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

அரசியல் தீர்வில் பங்களிப்பு செய்வது தொடர்பில் வடமாகாண சபையில் விவாதிக்கப்பட்டு, பிரேரணை ஒன்றின் ஊடாக உபகுழு ஒன்றை நியமித்து, அரசியல் தீர்வுக்குரிய ஆலோசனைகளை முன்வைப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதிலும், முடிவில் உறுப்பினர்களிடையே சபையில் ஆராயப்பட்ட விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டதாக சிவாஜிலிங்கம் கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version