வறிய நிலையில் இருக்கும் குடும்பங்களைக் குறி வைத்து அவர்களுக்கு மூளைச் சலவை செய்து வசதியான வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், பிற நாட்டவருக்கும் பெரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து வைக்கிறார்கள் சிலர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தைப் போலீஸார் சூழ்ந்து ரெய்டு நடத்தி அந்தப் பெண்ணை மீட்டனர். விசாரணையில் அவர் ஒப்பந்த திருமணம் செய்து கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இவர்கள்தான் வறுமையான நிலையில் உள்ள குடும்பத்தினரை அணுகி மூளைச் சலவை செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
தற்போது போலீஸ் பிடியில் சிக்கிய சோமாலியா நபரின் பெயர் அலி முகம்மது. 56 வயதான இவர் இந்தியாவில் தங்கியிருக்கும் சமயத்தில் தன்னுடன் தங்கியிருப்பதற்காக இந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 1லட்சம் பணம் கொடுத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி இந்தியா வந்தார்.
இவரது நண்பர் இஸ்மாயில் முஸ்ஸே. இவரும் சோமாலியாதான். இவர்தான் அந்த இரண்டு பெண்களோடு சேர்ந்து சம்பந்தப்பட்ட 26 வயதுப் பெண்ணை இவருக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
முஸ்ஸே கடந்த 20 வருடமாக சோமாலியா அகதியாக இந்தியாவில் தங்கியுள்ளார். இவர் இந்தியப் பெண்ணை மணந்து கொண்டு இந்தியாவிலேயே தங்கி விட்டார்.
அகதி அந்தஸ்துடன் இவர் இங்கு வாழ்ந்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு 6 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.