பத­விய ஸ்ரீபுர பிர­தே­சத்தைச் சேர்ந்த 11 வயது சிறு­மியை 11 மாதங்­க­ளாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்படும் சிறு­மியின் பாட்டன், சகோ­தரன் மற்றும் அயல் வீட்டு இளைஞன் ஆகி­யோரை பத­விய பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இந்த சிறு­மி­யி­னது தாயி­னது தந்­தை­யான பாட்டன் 12 வய­தான சகோ­தரன் மற்றும் அயல் வீட்­டி­லுள்ள 20 வயது இளைஞன் ஆகி­யோரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர்.

சிறு­மியின் தாய் கடந்த பெப்­ர­வரி மாதம் ஒரு நாள் வீட்டை விட்டு ஒரு தேவைக்­காக வெளியே சென்­ற­போது சிறு­மியை பாது­காப்­பாக பாட்­ட­னா­ரிடம் ஒப்­ப­டைத்துச் சென்­றுள்ளார்.

இச்­சந்­தர்ப்­பத்­தி­லேயே முதன்முறை­யாக பாட்டன் சிறு­மியை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

இதன் பின்னர் இந்த விட­யத்தை அறிந்த சிறு­மியின் சகோ­த­ரனும் அயல் வீட்டு இளை­ஞனும் சிறு­மியை அச்­சு­றுத்தி அவ்­வப்­போது தனித்­த­னி­யாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்தி வந்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

இச்­சம்­பவம் தொடர்­பாக தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­ச­பைக்கு கிடைத்த தக­வலை அடுத்து பத­விய பொலிஸார் சம்­பந்­தப்­பட்ட மூவ­ரையும் கைது செய்­துள்­ளனர். பரி­சோத­னைக்­காக கெபித்து கொல்லாவ வைத்திய சாலையில் சேர்க் கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version