மியாமி: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் குடிபோதையில், உபெர் கால் டாக்ஸி டிரைவரை, அஞ்சலி ராம்கிசூன் என்ற இளம் பெண் மருத்துவர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.
மியாமியில் உள்ள ஜாக்சன் ஹெல்த் அமைப்பில் நியூரலாஜி மருத்துவராக பணியாற்றிவரும் அஞ்சலி ராம்கிசூன், கடந்த 19-ம் தேதி உபெர் டாக்சி ஓட்டுநரிடம் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார்.
இந்த சம்பவத்தால் அஞ்சலி ராம்கிசூன் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவமனை நிர்வாகம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அப்போது அஞ்சலி, டாக்சி ஓட்டுநரின் இருக்கையை ஆக்கிரமித்து உட்கார்ந்துகொண்டு, காரின் உள்ளே இருந்த பொருட்களை வெளியே வீசியுள்ளார்.
அங்கு வந்த போலீசார் அப்பெண் மருத்துவரை அழைத்துச்சென்றனர். ஓட்டுநரும் உடன் சென்றார்.
பின்னர் அப்பெண் மருத்துவர் மீது வழக்கு பதிவு எதுவும் செய்யாமல், ஓட்டுநருடன் சமரசம் செய்து கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதுவரை இந்த தாக்குதல் வீடியோவை 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
அந்த வீடியோ…