பெற்றோருடன் இரவில் உறங்கிக் கொண்டிருந்த 13 வயதுடைய சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த குறித்த சிறுமியின் தாயின் சகோதரரான மாமனாரை கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பிரதேசத்தில் செங்கல் சுடும் ஆலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ள சந்தேக நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ள நிலையிலேயே குற்றத்தைப் புரிந்து விட்டு தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் ஜூன் மாதம் சம்பவதினம் இரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை, பெற்றோருடன்  உறங்கிக் கொண்டிருந்த சிறுமிமைய சந்தேக நபர் இவ்வாறு பாலியல் வல்லுறவுக்குட்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து சிறுமியின் பெற்றோர் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த வென்னப்புவ பொலிஸார் தங்கொட்டுவ பிரதேசத்தில் செங்கல் சுடும் ஆலையியொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 26 வயதுடைய திருமணமாகாத சந்தேக நபரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வென்னப்புவ பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version