புலம்பெயர்  தமிழர்களே புறப்படுங்கள்  எரித்திரியா நாட்டில் போய் குடியேறி வாழ்வோம். ஏன்? ஏன்?

எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அந்த நாட்டில் பெண்கள் தொகை அதிகமாகவும் ஆண்களின் சனத் தொகை குறைவாகவும் காணப்படுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை 4 மில்லியன்களாகும்.

1998-2000 ம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால் அந்த நாட்டு அண்களின் தொகை குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இவ்வாறு ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

………………………………………….

அன்பான  தமிழர்களே!  உங்களுக்கோர் அரிய சந்தர்ப்பம்!!  புறப்படுங்கள்  எரித்திரியா பக்கம்  போய் வாழ்வோம்.  எங்கட வட-கிழக்கிலும் பிரதேசங்களில்  85 ஆயிரம் விதவைகள் இருப்பதாகவும், வாழ வழியில்லாமல் பல ஆயிரக்கணக்கான பெண்கள்  வாழ்வதாகவும்  சொல்லிக்கொள்கிறார்கள்.

எரித்திரியா  போன்ற நாட்டு சட்டத்தை  தமிழர்கள் ஏன் கடைப்பிடிக்க கூடாது? வெளிநாட்டில்  வாழும் தமிழர்கள் இரண்டு பெண்டாடியை  திருமணம்  செய்யலாமே!

வெளிநாட்டில் உள்ள பெண்டாடியை வேலைக்கு அனுப்புங்கோ… நாட்டில ஒரு பெண்டாடியை வைத்து குடும்பம் நடத்துங்கோ. எப்படி  நம்ம யோசனை??

Share.
Leave A Reply

Exit mobile version