இஸ்ரேலால் உளவு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட தாக கூறப்படும் வல்லூறு ஒன்றை லெபனானிய அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
மேற்படி வல்லூறு இஸ்ரேலிய எல்லையிலிருந்து தென் லெபனானிய நகருக்குள் பறந்த வேளை லெபனானிய அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்தக வல்லூறின் காலில் கட்டப்பட்டிருந்த பட்டியை அவதானித்த அவர்கள் அது இஸ்ரேலால் அனுப்பப்பட்ட கழுகாக இருக்கலாம் என சந்தேகித்து அதனைப் பிடித்துள்ளனர்.
தொடர்ந்து அந்தக் கழுகைப் பரிசோதித்த அதிகாரிகள், அதனுடன் உளவு உபகரணங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அதன் காலில் அதனை அடையாளப்படுத்தும் வகையில் குறிப்பு மட்டுமே இணைக்கப்பட்டிருந்துள்ளது.
அந்தக் குறிப்பு இஸ்ரேலிய டெல் அவிவ் பல்கலைக்கழகத்தால் அதன் காலில் கட்டப்பட்டிருந்துள்ளது.