சமீபத்தில் ஐதராபாத்தில் 2016 ஆம் ஆண்டின் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழா நடைபெற்றது.இந்த விருது விழாவிற்கு ஏராளமான நடிகர், நடிகைகள் பங்கு கொண்டனர். இந்த விழாவில் நடிகை ஸ்ருதிஹாசனும் பங்கு கொண்டார். பொதுவாக எந்த ஒரு விழாவிற்கும் கவர்ச்சியில் வந்து, பலரது கவனத்தையும் தன் பக்கம் திருப்புவார்.
அந்த வகையில் இந்த பச்சை நிற கம்பளம் விரித்த விருது விழாவிற்கும் நடிகை ஸ்ருதிஹாசன் கவர்ச்சிகரமான உடையணிந்து வந்திருந்தார்.
அதிலும் அணிந்திருக்கும் உடை எந்நேரம் வேண்டுமானாலும் அவிழ்ந்து விழும் என்ற வகையில் இருந்தது. ஆனால் இந்த கவுனிற்கு இவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் அழகாக இருந்தது எனலாம்.
சரி, இப்போது 2016 ஆம் ஆண்டின் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவிற்கு நடிகை ஸ்ருதிஹாசன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போம்.

27-1453876374-1-shruthi-iifa-dress

ஃபல்குனி மற்றும் ஷேன் கவுன்
இது தான் நடிகை ஸ்ருதிஹாசன் அணிந்து வந்த ஃபல்குனி மற்றும் ஷேன் டிசைன் செய்த ஊதா நிற அழகிய எம்பிராய்டரி செய்யப்பட்ட செக்ஸி கவுன்.
ஹைலைட் – லோ நெக்
ஸ்ருதிஹாசன் அணிந்து வந்த இந்த கவுனின் ஸ்பெஷாலிட்டி, ஸ்ட்ராப்லெஸ் மட்டுமின்றி, மிகவும் லோ நெக் கொண்டிருப்பது தான்.
மேக்கப்
ஸ்ருதிஹாசன் இந்த கவுனில் பளிச்சென்ற காண, உதட்டிற்கு அடர் சிவப்பு நிற லிப்ஸ் டிக் போட்டிருந்ததோடு, கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, கண் இமைகளுக்கு மேல் மட்டும் மைத்தீட்டி வந்திருந்தார்.
ஆபரணங்கள்
இந்த லோ நெக் கவுனிற்கு ஸ்ருதிஹாசன் ஆபரணங்கள் எதுவும் அணியவில்லை. காதுகளுக்கு மிகவும் சிறிய கருப்பு நிற கம்மல் மட்டும் அணிந்திருந்தார்.
ஹேர் ஸ்டைல்
ஸ்ருதிஹாசன் சைடு ஸ்வெப்ட் எடுத்து, கூந்தலின் முனைகளில் மட்டும் கர்ல்ஸ் செய்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

உங்கள் விருப்பம்
உங்களுக்கு 2016 ஆம் ஆண்டின் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவிற்கு நடிகை ஸ்ருதிஹாசன் மேற்கொண்டு வந்த இந்த லுக் பிடித்துள்ளதா?
Share.
Leave A Reply

Exit mobile version