முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசெயலக பிரிவுக்குட்ப்பட்ட நட்டாங்கண்டல் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று (29) இரவு 10.00 மணிக்கு நட்டாங்கண்டல் புளியமரத்தடியிலுள்ள பாலப்பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு மற்றுமொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மல்லாவி வைத்த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் 50 வீட்டுத்திட்டம் பாண்டியன்குளம் நட்டாங்கண்டல் பகுதியை சேர்ந்தவரான 35 வயதுடைய சந்திரபாலன் சந்திரகுமார் எனவும் காயமடைந்தவர் நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த தங்கராசா குணதீபன் எனவும் அறியமுடிகிறது.
மரக்கடத்தல் சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட நபர்களைப் பற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக பலி தீர்க்கும் வகையில் இச்சம்பவம் இடம்பெற்றதாக மக்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸாரும் கிளிநொச்சியைச் சேர்ந்த பொலிஸ்தடயவியல் ஆய்வுப்பிரிவினரும் மேற்கொண்டுவருகின்றனர்
இதனை நண்பர்களுடன் பகிரவும்.