‘காத­லுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்­னானே! அட மூளை கூட இல்­லை­யென்று சொன்னேன் நானே!….. ‘ என்ற சினிமா பாடல் வரிகள் தான் ஞாப­கத்­துக்கு வரு­கி­றது.

ஆம். ‘காதல்’ என்ற உரு­வ­மற்ற ஒரு உணர்வை வைத்து இன்று உல­க­ளவில் புரி­யப்­படும் குற்­றங்கள் தொடர்பில் தகவல்களைப் பார்க்கும் போது அப்­ப­டித்தான் எண்ணத் தோன்­று­கி­றது.

இன்று நவீன தொழில்­நுட்பம் வெகு­வாக வளர்ச்­சி­கண்­டுள்ள நிலையில் அதன் தாக்கம் காத­லையும் விட்டு வைக்கவில்லை.

பேஸ்புக், வைபர், வட்ஸ் அப் என்று சமூக வலைத்­த­ளங்கள் காத­லுக்கும் காத­லர்­க­ளுக்கும் சொர்க்­க­மாக தெரியும் நிலையில் அதனை பயன்­ப­டுத்திக் கொள்ளும் மோச­டிக்­கா­ரர்­களின் திரு­வி­ளை­யா­டல்­களும் நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ணமே செல்­கின்­றன.

இந்­நி­லையில் தான் பேஸ்­புக்கில் உலா­வரும் ‘பெண் வேட­மிட்ட’ கப்பக் குழு ஒன்று தொடர்­பி­லான தக­வல்­களை நாம் பகிர்ந்து கொள்­ள­வுள்ளோம்.

குற்றப் புல­னாய்வு பிரிவின் பிரத்­தி­யேக விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள இந்த கப்பக் குழுவின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் தொடர் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரும் நிலையில் விசா­ர­ணைக்கு பாதிப்­பேற்­படா வண்ணம் விழிப்புணர்­வுக்­காக இது குறித்து தக­வல்­களைப் பகிர்ந்து கொள்­கின்றோம்.

பேஸ் புக் சமூக வலைத்­தளம் ஊடாக இளை­ஞர்­களை காதல் வலையில் வீழ்த்தி இடம்­பெறும் பாரிய கப்பம் கோரல் நடவ­டிக்கை தொடர்­பான தக­வல்­கள் இரா­ணுவ வீரர் ஒருவர் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளி­லேயே அம்­ப­லத்­துக்கு வந்­தது.

முறைப்­பாட்­டினை செய்த வீரரை நாம் சமன் என அடை­யா­ளப்­ப­டுத்­தலாம்.

சமன் தனது கடமை நேரத்தின் பின் கிடைக்கும் ஓய்வு நேரத்தை பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தில் செல­விடும் ஒருவர்.

தனது புகைப்­ப­டங்­களை தனது பேஸ் புக் பக்­கத்தில் தர­வேற்­று­வ­திலும் தெரிந்த, தெரி­யாத நண்­பர்­க­ளுடன் அரட்டை அடிப்­ப­தி­லுமே அந்த நேரம் செல­வா­னது.

தான் போடும் தனது புகைப்­பட பதி­வுக்கு ஒருவர் விருப்பு (Like) ஒன்­றினை அளிப்­பதும் அல்­லது கருத்து (comment) ஒன்­றினை தெரி­விப்­ப­தையும் பெரிதும் எதிர்­பார்த்த சமன் பேஸ் புக்­குடன் பின்னிப் பிணைந்­தவர் எனலாம்.

இந்­நி­லையில் தான் சில மாதங்­க­ளுக்கு முன் ஒரு ‘நண்பர் அழைப்பு’ (Friend request) வந்­தி­ருந்­தது. யுவதி ஒரு­வரின் அழகிய புகைப்­ப­டத்தை அடை­யா­ளப்­ப­ட­மா­கவும் (Profile Photo) பெய­ரையும் கொண்­டி­ருந்த அந்த ‘நண்பர் அழைப்பை’ உட­ன­டி­யா­கவே சமன் ஏற்றுக் கொண்டான்.

அடுத்த நொடி­யி­லேயே ‘ஹாய்… எப்­படி சுகம்’ என இரு வார்த்­தை­களில் சம­னு­ட­னான தொடர்பை ஆரம்­பித்தார் அந்த யுவதி (யுவ­தியின் பெயரில் உள்­ளவர்) தனக்கு ஒரு யுவதி நண்பர் அழைப்பை விடுத்து தன்­னுடன் உரை­யா­டு­கிறார் (chat) என நினைக்கும் போதே சம­னுக்கு புல்ல­ரித்­துள்­ளது.

‘நான் நலம்…. அப்­புறம் நீங்கள் யார்?’ சமனும் பதி­ல­னுப்பத் தவ­ற­வில்லை. இவ்­வாறு ஆரம்­பத்தில் இந்த தொடர்பு இறு­தியில் காதலில் விழுந்து யுவ­தியை நேர­டி­யாக பார்க்க வேண்டும் என்ற நிலைக்கு சமனை இட்டுச் சென்­றது.

குறித்த யுவதி ‘அஷினி’ என்ற பெய­ரி­லேயே தன்னை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்­டுள்ளார்.

அத்­துடன் தான் மலே­ஷி­யாவில் வசிப்­ப­தா­கவும் அங்­குள்ள ஹோட்டல் ஒன்றில் வர­வேற்பு உத்­தி­யோ­கத்­த­ராக தான் கட­மை­யாற்­று­வ­தா­கவும் அஷினி சம­னிடம் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் தான் அழ­கா­னவள் எனவும் தனக்கு 20 வயதே ஆகி­றது என்ற தக­வல்­க­ளையும் வழங்க அஷினி தவ­ற­வில்லை.

‘சரி ….. சரி உங்கள் அள­வுக்கு நான் அழ­கா­ன­வன் இல்லை தான்….. ஆனாலும் எங்கள் மனசு அழ­கா­னது……’ எல்லா இளை­ஞர்­களும் சொல்லும் வச­னத்தை சொல்­லியே சமனும் காதல் வலையை விரித்தான்.

இப்­படி ஒவ்­வொரு நாளும் நீண்ட தொடர்பு இறு­தியில் சம­னையும் அஷி­னி­யையும் காத­லர்­க­ளாக்­கி­யது.

‘எனக்கு உன் குரலை கேட்க ஆசை­யாக உள்­ளது. என்­னுடன் கதைக்க விரும்­ப­மில்­லையா! என ஒரு நாள் சமன் அஷினியிடம் கேட்­க­லானான்.

‘ நான் உன்­னிடம் என்னைப் பற்றி எல்லா விட­யங்­க­ளையும் சொன்னேன். ஆனால் ஒரே ஒரு விட­யத்தை மட்டும் மறைத்­து­விட்டேன்’ என அதற்கு அஷினி பேஸ் புக் ஊடாக பதில்­களை அனுப்ப ஆரம்­பித்தார்.

‘ எனது பெற்றோர் எனக்கு கண்­டியை சேர்ந்த ஒரு பையனை திரு­மணம் செய்து வைக்க பேசி­யுள்­ளார்கள். எனக்கு அந்த பையனை பிடிக்­க­வில்லை.

இப்­பொ­ழுது அவன் தொழில் நிமித்தம் இங்கு வந்­துள்ளான். எமது பெற்­றோருக்கும் அவனை பிடித்­தி­ருக்­கி­றது’ என அஷினி தனது திட்­டத்­துக்­கான அத்­தி­வா­ரத்தை போட ஆரம்­பித்­துள்ளார்.

காதலில் விழுந்­தி­ருந்த சம­னுக்கு அஷி­னியின் வார்த்­தைகள் என்­னமோ செய்­தது. உடனே அந்த செய்­திக்கு பதில் எழு­தினான்.

‘அப்­ப­டி­யானால் இனிமேல் என்­னுடன் செட் (chat) செய்ய மாட்­டாயா?….. ‘சமனின் ஏக்கம் அஷி­னிக்கு புரிந்­தது.

‘இல்லை எனக்கு பகலில் செட் (chat) செய்­வது கஷ்டம். ‘அவன் பகல் நேரத்தில் இங்கு வருவான் இரவு வேளையில் நான் பேஸ் புக் வரு­கிறேன் என அஷினி பதி­ல­ளித்தாள்.

அதன் பின்னர் சமன் அஷி­னியின் பேஸ் புக் உரை­யா­டல்கள் இரவு வேளை­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளது. காதல் கண்ணை மறைக்க தாறு மாறாக இரு­வரும் பேஸ் புக்கில் உரை­யா­ட­லா­யினர்.

காதலை இரு­வரும் கூறிக் கொண்ட பிறகு ஒருநாள் அஷினி தனது அரை நிர்­வாண (போலி) புகைப்­ப­டங்­களை சம­னுக்கு பேஸ்புக் ஊடாக அனுப்­பினாள்.

இதனால் அஷி­னியை முழு­மை­யாக நம்­பிய சமன் பதி­லுக்கு அஷி­னிக்கு அவள் கோரிய கோணங்­களில் தனது புகைப்­ப­டங்­களை அனுப்­பினான்.

தனது நிர்­வா­ணத்தை பிற­ருக்கு காட்­டு­வது குற்றம் என்ற உணர்வு சம­னுக்கு ஏற்­ப­டாத நிலையில் அஷி­னியை தனது காதலி என்­ப­தற்கு அப்பால் சென்று மனைவி என்றே ஏற்­றுக்­கொண்ட சமன் தனது நிர்­வாண வீடி­யோக்கள் பல­தையும் அஷி­னிக்கு அனுப்­பி­யுள்ளான்.

இந்­நி­லையில் ஒரு நாள் அவ­சர செய்­தி­யொன்றை சம­னுக்கு அனுப்­பிய அஷினி தனது பேஸ்புக் கணக்­கிற்குள் தனக்கு நிச்­ச­யிக்­கப்­பட்ட பையன் நுழைந்து தமது ரக­சி­யங்­களை கண்­டு­பி­டித்து விட்­ட­தா­கவும் அதனால் தான் மீண்டும் கூறும் வரை தனக்கு எதுவும் அனுப்ப வேண்டாம் என அவள் தெரி­வித்­துள்ளார்.

இது சம­னுக்கு பாரிய மன உளைச்­சலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. நாட்கள் கடந்து செல்ல ஒரு நாள் இரவு அஷி­னி­யிடம் இருந்து சம­னுக்கு பேஸ்­புக்கில் தகவல் வந்­தது.

சமன் எனது தொலை­பேசி நோட் புக் எல்­லா­வற்­றையும் அவன் (அஷி­னிக்கு நிச்­ச­யிக்­கப்­பட்­ட­தாக காட்­டப்­ப­டு­பவர்)

தரையில் அடித்து உடைத்­து­விட்டான். எனக்கு வாழ்வே வெறுத்து விட்­டது. உன்­னுடன் பேசாமல் எனக்கு இருக்க முடி­யாது. எனக்கு உன்­னுடன் பேச வேண்டும். அஷினி சமனின் எரியும் காதலில் பெற்றோல் ஊற்­றினாள்.

‘நான் நோட் புக் வாங்க உனக்கு பணம் அனுப்­பவா?’ அஷினி எதிர்­பார்த்­ததை சமன் கேட்­க­லானான். ‘அது எப்­படி…. நீ பாவம்…..’ என அஷினி நடிக்க சமன் பர­வா­யில்லை உனக்கு பணம் அனுப்ப வங்கிக் கணக்­கொன்றை தா என கோரி­யுள்ளான்.

அதனைத் தொடர்ந்து அஷினி கொடுத்த வங்கிக் கணக்­கிற்கு சமன் ‘நோட் புக்’ வாங்க 50 ஆயிரம் ரூபாவை வைப்புச் செய்­துள்ளான்.

இதனைத் தொடர்ந்து சிறிது காலம் மீண்டும் சமன் அஷினி காதல் படலம் தொடர்ந்­துள்­ளது. ஒரு நாள் சமனின் கைய­டக்கத் தொலை­பே­சிக்கு ஒரு அழைப்பு வந்­துள்­ளது.

‘ நீ…. சமன் தானே அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யவர் கேட்­டுள்ளார். நீ இரா­ணுவ முகாமில் தானே வேலை செய்­கிறாய்? நீ Y தரத்தை சேர்ந்­தவன் தானே?’ என மறு முனையில் பேசி­யவர் சமன் குறித்த தக­வல்­களை சரி­யாக சொல்­ல­லானார்.

சமனோ ‘ஹலோ…. நீ யார்?…. உனக்கு என்ன பிரச்­சினை?….. ‘என சவூதி அரே­பிய இலக்கம் ஒன்­றி­லி­ருந்து வந்த அந்த அழைப்­புக்கு தனக்கே உரிய இரா­ணுவ அதி­கார தொனியில் சமன் கேட்­டுள்ளான்.

‘அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யவர் நான் அஷி­னிக்கு நிச்­ச­யிக்­கப்­பட்ட பையன். என்ன பிரச்­சினை உனக்கு? நீ எனக்கு நிச்­ச­யிக்­கப்­பட்­ட­வ­ருடன் மாதக்­க­ணக்கில் செய்த திரு­வி­ளை­யா­டல்கள் எனக்கு தெரி­யாது என்று நினைக்­கி­றாயா?

உனக்கு வெட்கம் இல்­லையா? எத்­தனை புகைப்­ப­டங்கள் அனுப்­பி­யி­ருக்­கிறாய் போதா குறைக்கு வீடியோ வேறு. உனது தலைமை அதி­காரி கபில (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) தானே. நான் அவ­ரிடம் இதனை சொல்­கிறேன். இதனை இப்­ப­டியே விட்­டு­விட மாட்டேன் ‘ என பேசிக் கொண்டே போக­லானான்.

சம­னுக்கு தனது செயலின் பார­தூரம் அப்­போ­துதான் புரிந்­தது. ‘புரோ… நான் மட்­டு­மல்ல அவளும் தான் அனுப்­பினாள். இலங்கை வந்­தபின் என்­னையே திரு­மணம் செய்­வ­தா­கவும் அவள் வாக்­கு­று­தி­ய­ளித்தாள் ‘ என சமன் தனது நட­வ­டிக்­கை­களை நியா­யப்­ப­டுத்­த­லானான்.

‘ உனக்கு பைத்­தி­யமா? நீ ஒரு காட்டான். உனது அப்பா ஒரு விவ­சாயி மணம் முடிக்­காத இரு தங்­கைகள். அவை எல்லாம் எனக்குத் தெரியும்.

இப்­படி இருக்­கையில் தான் அஷி­னியை முடிக்கப் போகி­றாயா?’ என அந்த அடை­யாளம் தெரி­யாத நபர் தொலை­பே­சியில் திட்­டினான்.

ஒரு நாளைக்கு பல­முறை வந்த அடை­யாளம் தெரி­யாத அழைப்­பினால் சமனின் நிம்­மதி இல்­லாமல் போனது. முடி­யாத பட்­சத்தில் தனது தொலை­பேசி இலக்­கத்­தையும் சமன் மாற்­றினான்.

எனினும் அந்த அடை­யாளம் தெரி­யாத நபர் விட­வில்லை. சமனின் வீட்டு தொலை­பே­சிக்கு அழைப்பை ஏற்­ப­டுத்­தினான்.

‘ நீ உனது இலக்­கத்தை மாற்­றி­னாலும் வீட்டு இலக்­கத்தை மாற்­ற­வில்­லையே நான் உனது வீடி­யோக்­களை இணை­யத்தில் போடப் போகிறேன். என்ன சொல்­கிறாய்?’ என அந்த நபர் சம­னிடம் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

சமன் : ‘நான் என்ன செய்­வது? எனக்கு அஷி­னி­யுடன் கொஞ்சம் பேச வேண்டும். ‘

அடை­யாளம் தெரி­யாத நபர் ‘அஷினி எதற்கு? இதன் பிறகு அஷி­னி­யெல்லாம் இல்லை. என்­னுடன் தான் நீ டீல் பண்ண வேண்டும்.’

சமன்: ‘நான் என்ன செய்ய வேண்டும்? அடை­யாளம் தெரி­யாத நபர் உனக்கு அஷி­னிக்கு மட்டும் பணம் கொடுக்­கலாம். எனக்கு தர முடி­யாதா? இந்த வீடி­யோவை வெளி­யி­டாமல் இருக்க எனக்கு ஒரு இலட்சம் ரூபா வேண்டும். ‘

அந்த உரை­யா­டலின் பிர­காரம் அவரால் கொடுக்­கப்­பட்ட இரு வங்கிக் கணக்­கு­க­ளுக்கு சமன் சுமார் ஒன்­றரை இலட்சம் பணத்தை வைப்புச் செய்தான்.

சமனின் பயம், மானம் என்­ப­வற்றை வைத்து குறித்த அடை­யாளம் தெரி­யாத நபர் இந்த கப்பத் தொகையைப் பெற்றுக் கொண்டார்.

இந்­நி­லையில் சம­னுக்கு தனது காதல் பட­லத்தின் உண்மை புரிந்­தது. தான் மோச­டிக்­கா­ரர்­களின் வலையில் சிக்­கி­யதை அவன் உணர்ந்தான்.

இவ்­வாறே சில நாட்கள் உருண்­டோட, மீண்டும் அந்த அடை­யாளம் தெரி­யாத நபர் அழைப்பை ஏற்­ப­டுத்தி மிரட்­டினார்.

இந்­நி­லையில் தான் சமன், குற்றப் புல­னாய்­வுப்­பி­ரிவின் உத­வியை நாடினான்.

அத்­தனை கதை­க­ளையும் கூறிய சமன், ‘ சேர் என்­னுடன் யுவ­தி­யாக நடித்து செட் (Chat) செய்­த­வர்தான் அவர். நம்பி மோசம் போய்­விட்டேன்’ என தெரி­வித்தார்.

இதனைத் தொடர்ந்து குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரட்ன, பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் புல­னாய்வுப் பிரிவின் கணனி குற்­றங்கள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் எஸ்.கே. சேனா­ரத்ன தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரால் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இது குறித்து கடந்த 19 ஆம் திகதி கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பல­பிட்­டி­ய­வுக்கு அறிக்கை சமர்ப்­பித்த புல­னாய்வுப் பிரிவு வங்கிக் கணக்­குகள் மற்றும் இணையக் கணக்­கு­களை வைத்தும் சந்­தேக நபரால் பணம் மீளப் பெறப்­பட்ட ஏ.ரி.எம்.நிலைய சி.சி.ரி.வி கமரா பதி­வு­களை வைத்தும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் இது ஒரு திட்­ட­மிட்ட கப்பக் குழு ஒன்­றினால் முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பாடு என்­பதை புல­னாய்வுப் பிரிவு கண்­ட­றிந்­துள்­ளது.

இந்த கப்பக் குழுவின் மோசடி நடவடிக்கைகளால் முப்படைகளைச் சேர்ந்த 5 பேரும் ஜனரஞ்சக கிரிக்கெட் வீரர் ஒருவரும் நிதி நிறுவனங்களின் இரு இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளமை இது வரையிலான விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதே போன்று பிரபல நடிகைகள், ஆசிரியர்கள், நிறைவேற்று அதிகாரிகள் என பலரும் இந்த மோசடிக் கும்பலின் வலையில் வீழ்ந்துள்ளதும், வெட்கம் காரணமாக இது குறித்த முறைப்பாடுகள் பதிவாகாமல் இருந்துள்ளதும் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதுவரை சிறுவர்கள், பெண்களுக்கே சமூக வலைத்தளங்கள் வில்லனாக தெரிந்த நிலையில் தற்போது இளைஞர்களையும் அது விரட்ட ஆரம்பித்துள்ளது. இந்த கப்பக் குழுவை கைது செய்வது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக் கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைத் தளங்களில் பல மணி நேரங்களை செலவிடும் இளைஞர் யுவதிகளுக்கு இச்சம் பவம் ஒரு எச்சரிக்கையாக அமையட்டும்.

–எம்.எப்.எம்.பஸீர்–

Share.
Leave A Reply

Exit mobile version