பொலிவூட்டின் பிர­பல காதல் ஜோடி­யான ரன்பீன் கபூரும் கத்ரினா கைப்பும் பிரிந்­து­விட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

33 வய­தான ரன்பீர் கபூரும் 32 வய­தான நடிகை கத்­ரினா கைப்பும் பல வரு­டங்­க­ளாக காத­லித்து வந்­தனர்.

இதை பகி­ரங்­க­மாக ஒப்­புக்­கொள்­வதில் இரு­வரும் நீண்­ட­கா­ல­மாக தயங்­கி­ய­போ­திலும், இவர்­களின் காதல் ஒரு பகி­ரங்க இரக­சி­ய­மா­கவே இருந்­தது. இவ்­ வ­ருடம் இவர்கள் திரு­மணம் செய்­து­கொள்­வார்கள் எனவும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால், இவர்கள் இரு­வரும் அண்­மையில் பிரிந்­து­விட்­டனர் என்ற தகவல் பர­வி­யுள்­ளது.

இப்­ பி­ரிவின் பின்னர் ரன்பீர் கபூர் பொது நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­வது அரி­தா­க­வுள்­ளது. ஆனால், நடிகை கத்­ரினா கைப் பல நிகழ்ச்­சி­களில் பங்­கு­பற்­றினார்.

இதன்­போது அவரை சந்­திக்கும் செய்­தி­யாளர்கள், ரன்பூர் கபூருட­னான பிரிவு குறித்தும் கேள்­வி­களை எழுப்­பு­கின்­றனர்.

இக் ­கேள்­வி­க­ளுக்கு பதில் கூறு­வ­தற்கு கத்­ரினா தடு­மாறும் நிலையில், இது தொடர்பில் கத்­ரினா கைப்­புக்கு முக்­கிய ஆலோ­ச­னை­யொன்றை கூறி­யுள்­ளாராம் நடிகர் சல்மான் கான்.

ரன்பீர் கபூருட­னான உறவு முறிவு குறித்த ஊட­கங்­களின் கேள்­வி­களை தவிர்க்­காமல் இந்த உறவு குறித்து தெளி­வாக கூறி­விட வேண்டும் என்­ப­து தான் சல்மான் கானின் ஆலோ­சனை.

சல்மான் கானின் பிக்பொஸ் 9 நிகழ்ச்­சியின் மூலம் தனது புதிய திரைப்­ப­டத்தின் புர­மோஷன் நட­வ­டிக்­கைளை மேற்­கொள்­வ­தற்­காக கத்­ரினா கைப் வந்த­ போது பிரத்­தி­யே­க­மாக இந்த ஆலோ­ச­னையை சல்மான் கான் கூறி­னாராம்.

சல்மான் கானும் கத்­ரினா கைப்பும் பிர­பல முன்னாள் காதல் ஜோடிகள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கத்­ரினா கைப்பை மிகத் தீவி­ர­மாக சல்மான் கான் காத­லித்தார். ஆனால், அவ­ரி­ட­மி­ருந்து பிரிந்த கத்­ரினா, ரன்பீர் கபூரை காத­லிக்க ஆரம்­பித்தார்.

தற்­போதும் கத்­ரினா கைப் மீது சல்மான் கான் மிகுந்த அக்­கறை கொண்­டி­ருப்­பதை அவரின் நட­வடிக்­கைகள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன என பலர் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

பிக் பொஸ் நிகழ்ச்­சிக்கு கத்­ரினா கைப் சென்­ற­போது, கத்­ரினா, இயக்­குநர் ஆதித்யா ராய் சோப்ரா, நடிகை தபு ஆகியோர் சகிதம் செல்பீ எடுத்­துக்­கொண்டார் சல்மான் கான். இதன்­போது சல்மான், கத்­ரினா நெருக்­கத்தை பலர் அவ­தா­னித்­தனர்.

இதே­வேளை, ரன் கபூர் கத்­ரினா கைப் பிரிவு விட­யத்­திலும் சல்மான் கானின் பெயர் அடி­ப­டு­கி­றது.

பிக் பொஸ் நிகழ்ச்­சியில் பங்­கு­பற்­று­வ­தற்கு கத்­ரினா கைப் தீர்­மா­னித்­த­மையே ரன்­பீ­ருக்கும் கத்­ரி­னா­வுக்கும் இடையில் பிரிவு ஏற்­படக் காரணம் எனக் கூறப்­ப­டு­கி­றது.

கத்­ரி­னாவும் அவரின் முன்னாள் காதலர் சல்மான் கானும் சந்­திப்­பதை ரன்பீர் கபூர் விரும்­ப­வில்­லையாம்.

ஆனால், இவ்­ வி­ட­யத்தில் ரன்பீர் கபூருக்குப் பதி­லாக சல்மான் கானை கத்­ரினா கைப் தெரி­வு­செய்­துள்ளார் எனக் கூறப்படுகிறது.

கத்ரினா கைப் நடித்த பித்தூர் திரைப்படம் பெப்ரவரி 12 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இது பிரபல எழுத்தாளர் சார்ள்ஸ் டிக்கின்ஸன் எழுதிய “கிரேட் எக்ஸ்பெக்டேஷன்” நாவலை அடிப்படையாகக் கொண்ட கதையாகும்.

Share.
Leave A Reply

Exit mobile version