இலங்­கையில், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு, மற்றும் களஞ்­சி­யப்­ப­டுத்தல், சந்­தைப்­ப­டுத்தல் போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் முனைப்­பு­களை இந்­தியா தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

திரு­கோ­ண­ம­லையில், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை ஒன்றை அமைத்து, களஞ்­சி­யப்­ப­டுத்தி, அவற்றை விநி­யோ­கிப்­பது பற்­றிய திட்­டங்கள், இரண்டு நாட்டு அர­சாங்­கங்­க­ளி­னதும் கலந்­து­ரை­யா­ட­லுக்­கு­ரிய விட­ய­மா­கி­யி­ருக்­கி­றது.

அண்­மையில் இந்­தி­யாவின் ஒரிசா மாநி­லத்தில் உள்ள புவ­னேஸ்வர் நகரில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்­கேற்­றி­ருந்த பெற்­றோ­லிய வளங்கள் அபி­வி­ருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே, இந்­தி­யாவின் பெற்­றோ­லி­யத்­துறை அமைச்சர் தர்­மேந்­திர பிர­தாபைச் சந்­தித்துப் பேசி­யி­ருந்தார்.

இதில் கலந்­து­ரை­யா­டப்­பட்ட முக்­கி­ய­மான விடயம், திரு­கோ­ண­ம­லையில் இந்­தி­யாவின் எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை மற்றும் களஞ்­சி­யங்­களை அமைப்­பது தான்.

ஏற்­க­னவே இந்­தியன் ஒயில் கோப்­ப­ரேசன், திரு­கோ­ண­ம­லையில் எண்ணெய் களஞ்­சி­யங்­களைக் கொண்­டி­ருப்­ப­துடன், நாட்டின் பல பகு­தி­க­ளிலும் எரி­பொருள் விநி­யோ­கத்­திலும் ஈடு­பட்­டுள்­ளது.

இந்­த­நி­லையில், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை ஒன்றை திரு­கோ­ண­ம­லையில் அமைப்­பதன் மூலம், தனது நடவடிக்கைகளை இலங்­கையில் விரி­வாக்கிக் கொள்­ளவும், எண்ணெய் ஏற்­று­ம­தியில் ஈடு­ப­டவும் இந்­தியா திட்டமிட்டிருக்­கி­றது.

இது­பற்­றிய பேச்­சுக்கள் இப்­போது தான் தொடங்­கப்­பட்­டன என்று கூறு­வ­தற்­கில்லை. இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த போதே இது­பற்­றிய பேச்­சுக்கள் நடத்தப்பட்டிருந்­தன.

இலங்­கையை பிராந்­திய எண்ணெய்க் கேந்­தி­ர­மாக மாற்­று­வ­தற்கு இந்­தியா உதவத் தயா­ராக இருக்­கி­றது என்று அப்போதே அறி­வித்­தி­ருந்தார் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி.

இப்­போது அதன்­படி தான், திரு­கோ­ண­ம­லையில் எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு, களஞ்­சி­யப்­ப­டுத்தல், விநி­யோ­கத்­துக்­கான தளத்தை உரு­வாக்க இந்­தியா முனைப்புக் காட்­டு­கி­றது.

திரு­கோ­ண­ம­லையில், சிறப்பு பொரு­ளா­தார வலயம் ஒன்றை அமைப்­ப­தற்கு, ஏற்­க­னவே இரு­நா­டு­களும் பேச்­சுக்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றன.

அந்த முத­லீட்டு வல­யத்தின் ஒரு அங்­க­மாக, எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை­யையும் அமைப்­ப­தற்கு இந்­தியா திட்டமிட்டிருக்­கிறது.

ஏற்­க­னவே சம்­பூரில், இந்­தி­யாவின் தேசிய அனல்மின் கழ­கமும், இலங்கை மின்­சார சபையும் கூட்­டு­மு­யற்­சி­யாக 500 மெகாவாட் உற்­பத்தி திறன் கொண்ட ஒரு அனல் மின் நிலை­யத்தை அமைக்க இணக்கம் கண்­டி­ருக்­கின்­றன.

கடந்த 2015ஆம் ஆண்டு கட்­டு­மானப் பணிகள் தொடங்­கப்­பட்டு, 2017ஆம் ஆண்டு முடி­வ­டையும் வகையில், இந்த திட்டம் தீட்­டப்­பட்­டது. ஆனால், இது­வ­ரையும் இந்த அனல் மின் நிலைய கட்­டு­மானப் பணிகள் தொடங்­க­வில்லை.

இலங்கை தரப்பில் இழு­ப­றிகள் காணப்­ப­டு­வதால், இந்த கட்­டு­மானப் பணி­களில் தாமதம் ஏற்­பட்­டுள்­ளது. ஆனாலும் இந்தியா இதனை விரைந்து ஆரம்­பிப்­ப­தற்கு அழுத்­தங்­களைக் கொடுத்து வரு­கி­றது.

ஏற்­க­னவே, திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்தை அண்­டி­ய­தாக, சீனக்­கு­டாவில் உள்ள பிரித்­தா­னியர் காலத்து எண்ணெய்க் குதங்­களை இந்­தியா நீண்­ட­காலக் குத்­த­கைக்குப் பெற்றுப் பயன்­ப­டுத்தி வரு­கி­றது.

இவை எல்­லா­வற்­றையும் ஒருங்­கி­ணைத்து, திரு­கோ­ண­மலைப் பிர­தே­சத்­தையும், துறை­மு­கத்­தையும் கிட்­டத்­தட்ட தனது முழு­மை­யான செல்­வாக்­கிற்குள் கொண்டு வரு­வதே இந்­தி­யாவின் திட்டம்.

திரு­கோ­ண­மலைத் துறை­முகம், மீது இந்­தி­யா­வுக்கு மட்­டு­மன்றி, அமெ­ரிக்­கா­வுக்கும் கண் இருந்­தது.

 

1980 களின் தொடக்­கத்தில் அமெ­ரிக்க விமா­னந்­தாங்கி கப்பல் ஒன்று திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்­துக்கு ஒரு வெள்ளோட்டப் பய­ணத்­தையும் மேற்­கொண்­டி­ருந்­தது.

அதற்குப் பின்னர், அமெ­ரிக்­காவும், இலங்­கையும் உற­வு­களை பலப்­ப­டுத்திக் கொண்ட போது தான், அந்த உற­வு­களை சிதைப்­ப­தற்கு தமிழ்ப் போராளிக் குழுக்­க­ளுக்கு ஆயு­தங்­க­ளையும் பயிற்­சி­க­ளையும் கொடுத்து, தனக்கு சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டது இந்­தியா.

1987இல், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், இந்­தியா வடக்கு கிழக்கில் தனது படை­களை நிறுத்­தி­யது. அதன் மூலம், அமெ­ரிக்­காவின் கனவு தகர்க்­கப்­பட்­டது.

1990இல் இந்­தியா தனது படை­களை விலக்கிக் கொண்­டாலும், திரு­கோ­ண­ம­லையை யாரு­டைய கைக­ளிலும் விழுந்து விடா­த­படி உன்­னிப்­பாக கவ­னித்து வரு­கி­றது இந்­தியா.

மஹிந்த  ராஜபக்ஷ ஆட்­சிக்­கா­லத்தில், திரு­கோ­ண­ம­லையின் மீது சீனாவின் கவனம் திரும்­பிய போது, புது­டில்லி வெளிப்­ப­டை­யா­கவே எச்­ச­ரித்து அங்கு விமானப் பரா­ம­ரிப்பு தளத்தை அமைக்கும் சீனாவின் முயற்­சியை முடக்­கி­யது.

ஆனாலும், திரு­கோ­ண­ம­லையை பிற நாடு­களின் கண்­களில் இருந்து காப்­பாற்­று­வ­தற்­கா­கவே, அங்கு தனது பொருளாதார முத­லீட்டை அதி­க­ரிப்­ப­தற்­கான முயற்­சி­களை இந்­தியா மேற்­கொண்­டி­ருக்­கி­றது.

பெற்­றோ­லிய வளங்­களைக் கொண்­டி­ருக்கும் நாடுகள் மட்­டு­மன்றி, அவற்றைக் கட்­டுப்­ப­டுத்தும் மையங்­களும், கொண்டு செல்லும் வழி­களும் எதிர்­கா­லத்தில் கேந்­திர முக்­கி­யத்­துவம் மிக்­க­வை­யாக இருக்கும்.

இதனை அடிப்­ப­டை­யாக வைத்தே சீனா தனது பட்­டுப்­பாதை திட்­டத்தை செயற்­ப­டுத்தி வரு­கி­றது. ஜப்­பானும் அதனைச் சார்ந்தே செயற்­ப­டு­கி­றது.

தமக்­கான மூலப்­பொருள் / பிர­தா­ன­மாக / எரி­பொருள் கிடைக்கும் மற்றும் தமது பொருட்­களை சந்­தைப்­ப­டுத்தும் வழியான, இந்­தியப் பெருங்­க­டலில் தளங்­க­ளையும், துறை­மு­கங்­க­ளையும் அமைத்து பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வது சீனாவின் கனவுத் திட்டம்.

ஜப்­பா­னுக்கு கடல் கடந்த தளங்­களை நிறுவும் திட்டம் இப்­போ­தைக்கு இல்­லா­வி­டினும், இந்­தியா, இலங்கை போன்ற நாடு­க­ளுடன் பாது­காப்பு உற­வு­களைப் பலப்­ப­டுத்தி, அதனைச் சாத்­தி­ய­மாக்க முனை­கி­றது.

எதிர்­காலப் பாது­காப்புத் திட்­டங்கள், கொள்­கைகள் அனைத்தும் எண்ணெய் வளக் கேந்­தி­ரங்கள், விநி­யோகக் கட்டமைப்புகளைச் சார்ந்தே வடி­வ­மைக்­கப்­படும் வாய்ப்­புகள் உள்­ளன.

அதனால் தான் இந்­தியா, திரு­கோ­ண­ம­லையை, தனது எண்ணெய் கேந்­திர மைய­மாக மாற்ற முனை­கி­றது.

பாது­காப்­பா­னதும், போதிய ஆழம் கொண்­ட­து­மான இயற்கைத் துறை­முகம், தேவைக்கும் அதி­க­மா­கவே உள்ள- நன்கு உறு­தி­யா­னதும், பழைமை வாய்ந்­த­து­மான எண்ணெய்க் குதங்கள் எல்­லாமே, இந்­தி­யா­வுக்கு வாய்ப்­பாக அமைந்திருக்கின்­றன.

அதை­விட, இந்­தியப் பெருங்­கடல் வழி­யாகச் செல்லும் கப்­பல்­க­ளுக்கு எண்ணெய் நிரப்பும் வச­தி­க­ளுக்­கா­கவும் இதனைப் பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும்.

போர் போன்ற சூழல்­களின் போது, தனது நாட்­டுக்கு வெளியே எண்ணெய் சேமிப்பு கட்­ட­மைப்பு, விநி­யோக கட்­ட­மைப்பு ஒன்றைப் பேணு­வதும், இந்­தி­யா­வுக்கு உத­வி­யாக இருக்கும்.

இதனைக் கருத்தில் கொண்டு தான், இந்­தியா திரு­கோ­ண­ம­லையின் மீது குறி வைத்­தி­ருக்­கி­றது.

சபு­கஸ்­கந்­தையில் உள்ள எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை ஈரா­னிய எண்­ணெயை மட்டும் சுத்­தி­க­ரிக்கும் திறன் கொண்­டது. அங்­கி­ருந்து மசகு எண்ணெய் வரு­வது தடைப்­பட்டால், எரி­பொ­ருளை வேறு இடங்­களில் இருந்து கொள்­வ­னவு செய்ய வேண்­டிய நிலை ஏற்­ப­டு­கி­றது.

இந்­த­நி­லையில் தான், இலங்­கையில் எரி­பொருள் விநி­யோ­கத்­துக்கு இருக்­கின்ற வாய்ப்­பு­க­ளையும், இந்­தி­யாவின் எதிர்கால எண்ணெய்த் தேவைகள், கப்பல் போக்­கு­வ­ரத்து வழி­களின் தன்­மை­களைக் கருத்தில் கொண்டும், திருகோணமலை மீது குறிவைத்திருக்கிறது இந்தியா.

திருகோணமலையை பிராந்திய எண்ணெய் கேந்திரமாக மாற்ற இந்தியா, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை முதலீடு செய்யவும் தயாராக இருக்கிறது.

ஏனென்றால், இது இந்தியாவின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு உதவக் கூடிய திட்டங்களில் ஒன்றாகும்.

எனவே, இலங்கையில் தான் செய்யும் முதலீடு வருமானத்தை ஈட்டித் தருமா என்று கூடச் சிந்திக்காமல், பெருமளவில் நிதியைக் கொட்டவும் தயாராக இருக்கிறது இந்தியா. காரணம், திருகோணமலையின் கேந்திர அமைவிடம் தான்.

ஹம்பாந்தோட்டையில் சீனாவுக்கு சிறப்பு முதலீட்டு வலயம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதி அளிக்க இலங்கை அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், திருகோணமலை மீதான இந்தியாவின் கவனமும் கரிசனையும் இன்னும் அதிகரிப்பது ஆச்சரியத்துக்குரிய விடயம் அல்ல.

-என்.கண்ணன்

Share.
Leave A Reply

Exit mobile version