லெப். யோஷித ராஜபக் ஷவை கடற்­ப­டை­யி­லி­ருந்து இடை­நி­றுத்தும் அறி­விப்பு கடந்­த­வாரம் வெளி­யி­டப்­பட்ட போது, பொதுமக்கள் மத்­தியில் அந்தச் செய்தி அவ்­வ­ள­வாகப் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை.

ஏனென்றால் இது முன்­கூட்­டியே எதிர்­பார்க்­கப்­பட்ட ஒரு நட­வ­டிக்கை தான். ஆனால் சற்றுக் கால­தா­ம­த­மா­கவே நடந்தேறி­யி­ருக்­கி­றது.

கடற்­ப­டையில் பத்­தாண்­டுகள் வரை பணி­யாற்­றிய லெப்.யோஷித ராஜபக் ஷ இப்­போது சேவை­யி­லி­ருந்து இடைநிறுத்தப்­பட்­டுள்­ளதால், அவ­ருக்­கான சம்­ப­ளமும், ஏனைய கொடுப்­ப­ன­வு­களும் கூட நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

தற்­போது சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள அவர், கடு­வெல நீதி­மன்­றத்தில் ஒவ்­வொரு தவணையின் போதும், பிணையில் விடு­விக்­கு­மாறு விடுக்­கப்­படும் கோரிக்­கைகள் நீதி­மன்­றினால் நிராகரிக்கப்படுகின்றன.

இதனை எதிர்த்து கொழும்பு மேல் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட பிணை மனுவும் இழு­ப­றிக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றது. இந்­த­நி­லையில் தமது கைது அடிப்­படை உரிமை மீறல் என்று யோஷித ராஜபக் ஷ உயர்­நீ­தி­மன்­றத்­திலும் மனுவொன்றைத் தாக்கல் செய்­தி­ருக்­கிறார்.

இந்த மனுக்­களில் ஏதா­வது ஒன்றின் மூலம் அவ­ருக்குப் பிணை கிடைத்­தாலும் கூட கடற்­படைத் தள­ப­தியின் முன் அனும­தி­யின்றி கடற்­படைத் தளங்­க­ளுக்குள் நுழைய முடி­யாது என்று கடற்­படைப் பேச்­சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரி­வித்­தி­ருக்­கிறார்.

ஒரு கால­கட்­டத்தில் இலங்கைக் கடற்­ப­டையில் இருந்த எவ­ருமே அனு­ப­வித்­தி­ராத சுதந்­திரம், வசதி வாய்ப்­பு­க­ளுடன் திரிந்த யோஷித ராஜபக் ஷ, இப்­போது சிறைக்குள் தள்­ளப்­பட்­டி­ருப்­பது மாத்­தி­ர­மன்றி, கடற்­ப­டை­யி­லி­ருந்தும் இடை­நி­றுத்­தப்­படும் நிலைக்கு உள்­ளா­கி­யி­ருக்­கிறார்.

நிதி மோசடிக் குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ள அவ­ருக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்டு அது நிரூபிக்கப்­பட்டால், கடற்­ப­டையில் இருந்து லெப்.யோஷித ராஜபக் ஷ நிரந்­த­ர­மா­கவே நீக்­கப்­ப­டுவார் என்றும் அறிவிக்கப்­பட்­டுள்­ளது.

இத்­துடன் அவர் மீதான ஒழுங்கு நட­வ­டிக்­கைகள் ஓய்ந்து விடாது.

ஏனென்றால் போதிய தகை­மை­க­ளின்றி கடற்­ப­டையில் சேர்ந்து கொண்டார், கடற்­படைத் தள­ப­தியின் முன் அனுமதியைப் பெற்றுக் கொள்­ளாமல், பெரும் எண்­ணிக்­கை­யான வெளி­நாட்டுப் பய­ணங்­களை மேற்­கொண்டார் என்ற இரண்டு குற்­றச்­சாட்­டு­க­ளையும் லெப்.யோஷித ராஜபக் ஷ எதிர்­கொண்­டி­ருக்­கிறார்.

இது தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு ஏற்­க­னவே கடற்­படைத் தள­ப­திக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இந்தச் சூழலில் தான், லெப்.யோஷித ராஜபக் ஷவை, இடை­நி­றுத்­து­மாறு பாது­காப்பு அமைப்பு மூலம் கடற்­படைத் தலைமைக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டது.

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட கடத்தல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தே­கத்தில் கேர்ணல் சம்மி குமாரரத்ன, லெப்.கேர்ணல் பிர­போத வீர­சே­கர உள்­ளிட்ட இரா­ணுவப் புல­னாய்வு அதி­கா­ரிகள் கைது செய்யப்பட்டவுடனேயே, அவர்­களை சேவை­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தி­யது இரா­ணுவம், அவர்­க­ளுக்கு சம்­ப­ளத்­தையும் வழங்­க­வில்லை.

இந்த விவ­கா­ரத்தை அர­சி­ய­லாக்­கிய மஹிந்த ராஜபக் ஷ, இடை­நி­றுத்­தப்­பட்ட இரா­ணுவப் புல­னாய்வு அதி­கா­ரி­க­ளுக்கு தாமே சம்­பளம் கொடுப்­ப­தாக அறி­வித்­தி­ருந்தார். அதனை அவர் தொடர்ந்து வழங்­கு­கி­றாரா இல்­லையா? என்று தெரியவில்லை.

ஆனால், அர­சாங்­கத்­தினால் கைவி­டப்­பட்ட படை­யி­னரை தாம் காப்­பாற்­று­வ­தாக ஒரு தோற்­றப்­பாட்டை அவர் உருவாக்கி­யி­ருக்­கிறார்.

 

இப்­போது, அதே மஹிந்த ராஜபக் ஷ தனது மக­னுக்குத் தானே சம்­ப­ளத்தைக் கொடுக்க வேண்­டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆனாலும், லெப்.யோஷித ராஜபக் ஷ சிறையில் இருப்­ப­தாலும், அவ­ருக்­கென்று தனி­யான குடும்பம் இல்­லா­த­தாலும், அவ்­வாறு சம்­பளம் கொடுத்து அர­சி­ய­லாக்க அவரால் முடி­யாது போயி­ருக்­கி­றது.

எவ்­வா­றா­யினும் யோஷித ராஜ­கபக் ஷ கைது செய்­யப்­பட்டு கிட்­டத்­தட்ட ஒரு மாதம் நெருங்­கிய பின்னர் தான் அவரை இடை­நி­றுத்தும் முடிவைக் கடற்­படை எடுத்­தி­ருக்­கி­றது.

கடற்­படைச் சட்­டங்­களின் கீழ் அவர் மீது இந்த நட­வ­டிக்­கையை எடுக்க கிட்­டத்­தட்ட நான்கு வாரங்கள் சென்றிருக்கின்றன. இது அதி­க­பட்ச பொறு­மை­யைத்தான் காட்­டி­யி­ருக்­கி­றது.

ராஜபக் ஷ குடும்­பத்தின் உறுப்­பினர் என்­பதால் கடற்­படை இந்தப் பொறு­மையை கடைப்­பி­டித்­ததா அல்­லது அர­சியல் ரீதி­யாக அவர் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்குத் தடைகள் தடங்­கல்கள் இருந்­ததா என்று தெரி­ய­வில்லை.

எனினும், இது­போன்ற நட­வ­டிக்­கை­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­படும் என்­பதை, மஹிந்த ராஜபக் ஷவும், லெப்.யோஷித ராஜ­பக்­ ஷவும் முன்­னரே அறிந்­தி­ருந்­தனர்.

அத­னால்தான், கடந்த ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி ஜனா­தி­பதி தேர்­தலில் மகிந்த ராஜ­பக் ஷ தோல்­வி­ய­டைந்­த­வுடன், லெப்.யோஷித ராஜபக் ஷ பதவி விலகல் கடி­தத்தை கைய­ளித்­தி­ருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷ அலரி மாளி­கை­யி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு முன்­ன­தாக, 2015 ஜன­வரி 09 ஆம் திகதி அதிகாலையில் யோஷித ராஜபக் ஷ சேவையில் இருந்து விலகும் கடிதம் கடற்­படைத் தள­ப­திக்கு அனுப்­பப்­பட்­டது.

ஆனால், அந்த விலகல் கடிதம் அப்­போது ஏற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருக்­க­வில்லை. அந்தக் கடிதம் அப்­போது ஏற்றுக் கொள்ளப்­பட்­டி­ருந்­தாலும் கூட, கடற்­ப­டை­யினால் துறைசார் ஒழுங்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்க முடியும்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா இரா­ணு­வத்­தி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற பின்­னரே, 2010ஆம் ஆண்டு அவ­ருக்கு எதி­ராக இராணுவ நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டது.

எனவே லெப்.யோஷித ராஜபக் ஷவின் இடை­நி­றுத்தம் நிரந்­த­ர­மா­னதா என்­பதை தீர்­மா­னிக்­கப்­போ­வது அவர் மீது சுமத்தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­ப­டு­வதில் தான் தங்­கி­யி­ருக்­கி­றது.

36087யோஷித ராஜபக் ஷவைக் கைது செய்­ததன் மூலம், அர­சாங்கம் ராஜபக் ஷ குடும்­பத்தின் மீது கைவைக்க முடியாது, கைவைக்­காது என்று அர­சியல் மட்­டங்­களில் பர­வ­லாக இருந்து வந்த ஒரு கருத்து உடைக்­கப்­பட்­டது.

அதே­வேளை, இந்தக் கைது ஒரு அடை­யாள நட­வ­டிக்கை தான், ஒரு வாரமோ இரண்டு வாரங்­களோ கழித்து விடு­வித்து விடு­வார்கள் என்றும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனாலும், யோஷித ராஜபக் ஷ மீதான விசா­ர­ணையின் பிடி இறுக்­கப்­பட்டு, பிணையில் வெளி­வர முடி­யாமல் திணறுகின்ற நிலையைப் பார்க்­கின்­ற­போது, ராஜபக் ஷ குடும்­பத்­துக்­கான ஒரு எச்­ச­ரிக்­கை­யா­கவே இது பயன்படுத்தப்படு­கி­றது போலத் தெரி­கி­றது.

பல்­வேறு ஆட்­க­டத்­தல்கள், கொலைகள், காணா­மற்­போ­தல்கள் உள்­ளிட்ட குற்­றச்­செ­யல்­களில், தொடர்­பு­பட்­டுள்­ள­தாக ராஜபக் ஷ குடும்­பத்­தி­னரின் பெயர்கள் தாரா­ள­மா­கவே அடி­ப­டு­கின்ற நிலையில், அவர்­களும் சிறைக்­கம்­பி­களை எண்ணும் நிலை தவிர்க்க முடி­யாது என்று எச்­ச­ரிக்கும் வகையில் தான் யோஷிதவின் கைது அமைந்­தி­ருந்­தது.

அதை­விட, தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் மஹிந்த ராஜபக் ஷ தீவிரம் காட்­டிய போது தான், யோஷிதவின் கைது இடம்பெற்றது.

இதற்குப் பின்னர், மஹிந்த ராஜபக் ஷ அவ்வப்போது எதிர்ப்பை வெளிப்படுத்தினாலும், தீவிரத்தன்மையைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்.

இது ராஜபக் ஷ குடும்பத்துக்கு யோஷித ராஜபக் ஷவின் கைது பீதியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

யோஷிதவை வைத்து மஹிந்தவுக்கு மூக்கணாங் கயிறு போடுவதில் அரசாங்கம் வெற்றியைக் காணுமேயானால், ராஜபக் ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் குறுகிய காலத்துக்குள் கைது செய்யப்படுவது சாத்தியமற்றதாகவே இருக்கும்.

அதேவேளை, யோஷிதவின் கைதுக்குப் பின்னரும் மகிந்த ராஜபக் ஷவுக்கு கடிவாளம் போட முடியவில்லை என்று அரசாங்கம் உணர்ந்தால், கூடிய விரைவில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெலிக்கடைச் சிறையின் வாசத்தை நுகர வேண்டிய நிலை ஏற்படலாம்.

-கபில்-

Share.
Leave A Reply

Exit mobile version