ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் புதிய படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘இது நம்ம ஆளு’ வருகிற 20ம் தேதி வெளியாகவுள்ளது.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பாண்டிராஜ்   இயக்கியுள்ள இப்படத்திற்கு குறளரசன் இசையமைத்துள்ளார்.

சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மஞ்சிமா மோகன் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இப்படத்தை அடுத்து ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் தலைப்பு   ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்று பெயரிடப்பட்டு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தலைப்பை சுருக்கமாக ‘AAA’ என்று அழைத்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், புதுமுக நடிகைகளை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகைகள் யார் என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலுக்கு அடியில் நீந்த பயிற்சி பெறும் ராகிணி திவேதி

201605021729414228_Ragini-Dwivedi-is-training-in-deep-sea-diving_SECVPF.gifநிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர், ராகிணி திவேதி. இப்போது கன்னட முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் ‘அறியான்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

நடிப்பில் மட்டுமல்ல நிஜத்திலும் சாதனை செய்ய வேண்டும் என்று விரும்பும் ராகிணி, நீந்துவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.

இவர் கடலுக்கு அடியில் நீந்தும் ‘ஸ்கூபா’ பயிற்சி பெற்று வருகிறார். இதுபற்றி கூறிய அவர்… நான் இப்போது நிறைய ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறேன். சினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும் ஆக்ஷன் ஹீரோயின் ஆக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை.

அதன் முதல் கட்டமாக, ஆஸ்திரேலியாவில் கடலுக்கு அடியில் நீந்தும் ‘ஸ்கூபா’ பயிற்சி பெற்றேன். அடுத்து மாலத்தீவிலும் தொடர்ந்து வேறுசில நாடுகளிலும் இந்த பயிற்சியை பெற இருக்கிறேன்.

முழுமையாக பயிற்சியை முடித்த பிறகு சான்றிதழ் கிடைக்கும். அதன் பிறகு நான் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். இது தொடர்பான போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்பதே விருப்பம்” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version