அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நிர்வாணக் கோலத்தில் நடனமாடிய பெண்ணொருவர் பொலிஸாரையும் தாக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
நியூயோர்க் மத்திய ரயில் நிலையத்துக்கு அருகில் பருமனான பெண்ணொருவர் தனது ஆடைகளை களைந்துவிட்டு நடனமாடியதுடன் குங்பூ பாணி யில் கை கால்களை காற்றில் “தாக்குதல்களை” மேற்கொண்டவாறு காணப்பட்டார்.
அவர்களில் ஒருவர், அப் பெண்ணை அமைதிப்படுத்துவதற்காக அப்பெண்ணின் முதுகில் கையை வைத்தார். ஆனால், அப் பெண் தனது நடனத்தை நிறுத்தாமல் அப் பொலிஸ் உத்தியோகத்தரை கையால் குத்தினார்.
சிறிது நேரத்தின் பின் அப் பெண் களைப்படைந்து அருகிலுள்ள பென்ச் ஒன்றில் ஓய்வெடுக்க ஆரம்பித்தார்.
பின்னர் அவரை பொலிஸார் அப்பால் அழைத்துச் சென்றனர். இப் பெண் ஏன் ஆடைகளைக் களைந்து கொண்டார் என்பது தெரிய வில்லை.