லண்டன் நகர மேயர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் தொழிற்க கட்சி சார்பில் போட்டியிட்ட சடிக் கான் வெற்றிபெற்று, ஐரோப்பாவின் பெரு நகரம் ஒன்றில் மேயராக தெரிவுசெய்யப்பட்ட முதல் முஸ்லிம் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்று முடிந்த தேர்தலின் வாக்குகள் என்னும் பணி ஏறத்தாள முடிவடைந்திருக்கும் நிலையில் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கான் அவரது போட்டியாளரான பழமைவாத கட்சியை சேர்ந்த சக் கோல்ட்சிமித்தை விட 8 புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கானை மிக மோசமான முறையில் விபரித்து வந்த கோல்ட்சிமித் அவரை முஸ்லிம் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி பேசிவந்தார்.
இருவருக்கும் இடையிலான பிரசாரம் மிகவும் கடுமையாக இருந்துவந்த நிலையில், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாத நிலைமை இருந்துவந்தது.
இருந்தபோதிலும் கான் இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுளார்.
இந்த வெற்றி மூலம் இங்கிலாந்தின் மிகவும் வலிமைமிக்க ஒரு முஸ்லிம் நபராக கான் மிளிர்ந்துளார் என்று ஊடகங்கள் வர்ணித்துள்ளன.
லண்டன் மா நகரின் பொலிஸ் , போக்குவரத்து, கொள்கை மற்றும் சுற்றாடல் ஆகியவற்றுக்கு 17 பில்லியன் பவுண்டுகளை அவரால் செலவிடமுடியும்.
8.6 மில்லியன் மக்கள் தொகை உள்ள லண்டன் மாநகரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 1 மில்லியன் ஆகும்.
கானின் தகப்பனார் 25 வருடங்களாக பேருந்து வண்டி சாரதியாக பணியாற்றினார். அவரது தயார் தையல் பனி செய்துவந்தார்.
சட்டத்துறையில் பட்டம் பெற்ற கான் சில காலம் மனித உரிமைகள் சட்டத்தரணியாக பணியாற்றினார்.
பின்னர் 2005 இல் அவர் வாழும் டூட்டிங் பகுதியில் தொழில் கட்சி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
2010 ஆம் ஆண்டு பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவும் தனது அமைச்சரவையில் சாமூகங்கள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை வழங்கினார். பின்னர் எட் மிலபான்ட் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது நிழல் அமைச்சராக பணியாற்றினார்.