நீண்ட காற்சட்டை அணியக் கூடாது என தெரிவித்து புதிதாக களனி பல்கலைக் கழகத்துக்கு அனுமதி பெற்றுச் சென்ற மாணவிக்கு பகிடிவதை செய்த அப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஐவர் கிரிபத்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் மாணவி ஒருவர் செய்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைவான விசாரணைகளிலேயே இந்த ஐவரையும் கைது செய்ததாக களனி பொலிஸ் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
தற்போது பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலை யில் அவர்களுக்கான பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ள களனி பல்கலைக்கழகத்துக்கு புதிதாக அனுமதி பெற்றுள்ள மாணவி ஒருவர் தனக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை எனும் பெயரில் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக முறைப்பாடளித்துள்ளார்.
பல்கலையில் புதிய மாணவியர் ஒரு வருடம் நிறைவுறும் வரை நீண்ட காற்சட்டைகளை அணியக் கூடாது என ‘சட்டம்’ ஒன்று போடப்பட்டுள்ளதாக கூறி, குட்டையாக உடையணிய நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அதனை மீறி நீண்ட காற்சட்டை அணிந்து வரும் மாணவியர் கடுமையான ஏச்சுக்கள் பேச்சுக்களுக்கு அனைவரினதும் முன்னிலையில் உள்ளாவதாகவும் இதனால் தான் பெரிதும் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும் கிரிபத்கொடை பொலிஸாருக்கு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள கிரிபத்கொடை பொலி ஸார் அப்பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவியர் நால்வர், ஒரு சிரேஷ்ட மாண வன் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்துள் ளனர்.
இவர்கள் ஐவரையும் அவரவர் பொலிஸ் பிரிவுகளில் வைத்து கைதுசெய்த தாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்ன கோனின் ஆலோசனைக்கு அமைய கிரிபத் கொட பொலிஸார் மேலதிக விசாரணை களை முன்னெடுத்துள்ளனர்.