மதுரை : தமிழக முதல்வர் ஜெயலலிதா, மக்கள் யாரையும் சந்திக்காமல் தனித்தீவு போல் வாழ்ந்து வருகிறார் என்றும் தமிழகத்தில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது என்றும், உலகத்திலேயே தன்னை மட்டுமே அறிவாளியாக நினைக்கிறார் என்றும் மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்., துணை  தலைவர் ராகுல் கடுமையாக தாக்கி பேசினார்.

ராகுல் மேலும் பேசுகையில்:

திமுகவும், காங்கிரசும் ஒரே சிந்தனை, ஒரே நோக்கத்திற்காக இணைந்து செயல்படுகிறோம். இரண்டு விதமான தலைவர்கள் உண்டு, ஒரு வகை ஆறு கடலை நோக்கி போவது போல் மக்களை நோக்கி செல்பவர்கள்.

மக்களை சந்திக்கும் போது அவர்கள் நிலையை அறிந்து கொள்ள முடியும். ஆனால் மக்களை சந்திக்காமல் மக்களை பற்றி தெரிந்து கொள்ள முடியாதவர்கள்.

இவர்கள் தங்களை பெருமையாக நினைத்து கொள்கின்றனர். தமிழகம் இந்தியாவின் வளர்ந்த மாநிலமாக இருந்திருக்க வேண்டும்.

மக்களை சந்திக்கும் தலைவர்களாக பெரியார், காமராஜ், எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் திகழ்ந்தனர்.

ஸ்டாலினிடமும் இந்த குணம் உண்டு. இங்கு ஒரு முதல்வர் யாரையும் சந்திப்பதே இல்லை. தமக்கு எல்லாமே தெரியும் என்ற நிலையில் உள்ளார். உலகிலேயே ஒரே ஒரு அறிவாளி ஜெ., என தன்னை நினைத்து கொள்கிறார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த சத்தியா என்ற சிறுமி. இவரது தந்தை குடி பழக்கத்தினால் இறந்தார். இவரது தாயாரும் பின்னர் இறந்தார்.

சத்தியா அநாதை ஆனார். 800 முதல் 6 ஆயிரத்து 800 கடைகளாக இன்று விஸ்தரிக்கப்பட்டது. ஜெ., இலவச பொருட்களை தருவதாக வாக்குறுதி அளித்தார்.

5 ஆயிரம் ரூபாய் இலவசமாக கொடுப்பதாக, ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து 60 ஆயிரம் மது மூலமாக அபகரித்து கொண்டார்.

மிக்ஸி கிரைண்டர் செயலற்று போனதாக அறிந்தேன். வெள்ளத்தினால் சென்னையில் பலரும் பாதிக்கப்பட்ட போது நான் டில்லியில் இருந்து வந்தேன்.

ஆனால் ஜெ., 4 சுவருக்குள் முடங்கி கிடந்தார். தமிழகம் பின்னடைந்த நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது. இதனால் தொழில் நிறுவனங்கள் வளர முடியவில்லை.

ஊழல் அற்ற மாநிலமாகவும், பூரண மதுவிலக்கு கொண்டதாகவும் இந்த மாநிலத்தை மாற்றுவோம். இவ்வாறு ராகுல் பேசினார்.

ராகுலின் பேச்சை காங்., தேசிய செயலர் திருநாவுக்கரசர் தமிழில் மொழி பெயர்த்தார்,

Share.
Leave A Reply

Exit mobile version