ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய மாத்திரை, மருந்துகளை சட்டவிரோதமாக திசை திருப்பி சுவிஸ் தொழிலதிபர் ஒருவர் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மலிவான விலையில் மாத்திரை மற்றும் மருந்துக்களை தயாரித்து அனுப்ப ஐ.நாசபை ஒரு சிறப்பு திட்டத்தை அமுல்படுத்தியது.

இந்த திட்டம் மூலம் மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த பணியில் சுவிஸின் சூரிச் நகரில் உள்ள தொழிலதிபர் ஒருவர் ஈடுப்பட்டுள்ளார்.

தற்போது 70 வயதான அந்த நபரின் பெயர்சுருக்கமாக M.K என அழைக்கப்படுகிறது. இவர் தென் ஆப்பிரிக்க நாட்டில் மருந்துக்களை விநியோகம் செய்யும் நபர் ஒருவருடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்த ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளின் அட்டையில் இருந்த ஆங்கில பெயர்களை நீக்கிவிட்டு, ஜேர்மன் மொழியில் புதிதாக அட்டைகளை தயார் செய்து அவற்றை அதிக விலைக்கு ஐரோப்பா நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக எய்ட்ஸ் மாத்திரைகளை விற்பனை செய்ததன் மூலம் இவர் சுமார்9,95,000 பிராங்க்(14,92,19,060இலங்கை ரூபாய்) அளவிற்கு வருமானம் ஈட்டியுள்ளார்.

ஆனால், இந்த சட்டவிரோதமான செயல் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

எனினும், ஜேர்மன் நாட்டில் இந்த மாத்திரை விற்பனை செய்யப்பட்டபோது, அட்டைகளில் ஒன்று ஏற்கனவே பிரிக்கப்பட்டு இருந்ததால், அது தொடர்பாக புகார்கள்எழுந்துள்ளது.

இந்த புகார்களை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தான் இந்த சட்டவிரோத செயல்கள் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

எய்ட்ஸ் மாத்திரைகளை விற்பனை செய்து சுமார்15 கோடி வருமானம் ஈட்டிய நபருக்கு சுவிஸ் நீதிமன்றம் 8,500 பிராங்க் (12,74,735 இலங்கை ரூபாய்) அபாரதம் விதித்தது.

தென் ஆப்பிரிகாவை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத அந்த நபருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் 5,200 பிராங்க் அபாரதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version