மனைவி பல­ருடன் தொடர்பு வைத்­தி­ருந்­ததால் ஆத்­தி­ர­ம­டைந்த கணவன் மனை­வியை கொலை செய்த சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

நீலாங்­கரை ராஜேந்­திரா நகரை சேர்ந்த தம்­பதி முரளி (29), ஜானகி (22). இவர்­க­ளுக்கு ஒரு மகன், மகள் உள்­ளனர். முரளி அடிக்­கடி குடித்து­விட்டு வீட்­டுக்குச் சென்­றுள்ளார்.

இந்­நி­லையில், ஜான­கிக்கு வேறு ஒரு­வ­ருடன் கள்­ளத்­தொ­டர்பு ஏற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. இது முர­ளிக்கு தெரி­ய­ வ­ரவே, மனைவியை கண்­டித்­துள்ளார்.

இதனால் இரு­வ­ருக்கும் அடிக்­கடி பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே மனை­வியின் தவ­றான நடத்தை கார­ண­மாக, வீட்டை காலி செய்­து­விட்டு அதே பகு­தியில் உள்ள அறிஞர் அண்ணா நகருக்கு முரளி குடி­பெ­யர்ந்­துள்ளார்.

அங்கும், ஒரு­வ­ருடன் ஜான­கிக்கு பழக்கம் ஏற்­பட்­டுள்­ளது. அதுவும் முர­ளிக்கு தெரி­ய­வர, ஜான­கியை பல­முறை கண்­டித்­துள்ளார்.

இந்­நி­லையில், ஞாயிற்­றுக்­கி­ழமை ஜானகி, அவ­ரது தாய் வீட்டில் உயி­ரி­ழந்து கிடந்­துள்ளார். அக்கம் பக்­கத்­தினர் இது­கு­றித்து நீலாங்கரை பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­வித்­துள்­ளனர்.

பொலிஸார் சம்­பவ இடத்­துக்கு விரைந்து சென்று விசா­ரணை நடத்­தி­யுள்­ளனர். ஜான­கியின் கழுத்தில் நகக் கீறல் இருந்­துள்­ளது.

கழுத்தும் இறுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனவே, சட­லத்தை மீட்டு பிர­தேச பரி­சோ­த­னைக்­காக வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்பி வைத்­தனர்.

பிறகு அறிஞர் அண்ணா நக­ரி­லுள்ள ஒரு வீட்டில் அவ­ரது நண்­பர்கள் மார்ஷல் (32), பார்த்தின் (29) ஆகி­யோ­ருடன் முரளி பதுங்­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

பொலிஸார் விரைந்து சென்று, முரளி உட்­பட 3 பேரையும் கைது செய்து விசா­ரணை செய்­துள்­ளனர்.

இந்­நி­லையில் பொலி­ஸா­ரிடம் முரளி அளித்த வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, ‘‘ஜான­கிக்கு பல­ருடன் தொடர்பு இருந்­தது.

அதை கைவி­டும்­படி பல­முறை கூறியும் கேட்­க­வில்லை. மனம் உடைந்த நான், நண்­பர்­க­ளுடன் சேர்ந்து ஜான­கியை கொலை செய்தேன்’’ என தெரி­வித்­துள்ளார்.

பின்னர், 3 பேரையும் பொலிஸார் கைது செய்து ஆலந்தூர் நீதி­­மன்­றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்­ள­னர்.

Share.
Leave A Reply

Exit mobile version