ஆரம்ப சுடரினை ஏற்றும் நிகழ்வு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

யாழ்.மாவட்டத்தில் அதிகளவானவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செம்மணி பகுதியில் இன்று காலை 10 மணிக்கு சுடரேற்றும் நிகழ்வு ஆரம்பமானது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிவாஜிலிங்கத்தின்   கோமாளித்தனம்!!

அவரசப்பட்டு,   சிவாஜிலிங்கம் போன்றோர்  தன்னிச்சியாக  “முள்ளிவாய்க்கால் நினைவு”  தினத்தை  கொண்டாடுவதன்  மூலம்  இந்த நினைவு தினத்தின் மகிமையை கெடுக்கின்ற  ஒரு  வேலைதான் இந்தச்  செயலாகும்.

சிவாஜிலிங்கம் இந்தமாதிரியான  செயலை தமிழ் மக்கள் கோமாளிதனமான செயலாகவே பார்கின்றார்கள்.

வடமாகாண சபையின்  மூலம்  தமிழ்  மக்களை பாரிய அளவில்   ஒன்று  திரட்டி செய்யவேண்டிய   “முள்ளிவாய்க்கால் நினைவு” தினத்தை  ஒரு சிலர்  தங்களின்  சுயவிளம்பரத்திற்காக   செய்வது என்பது  முள்ளிவாய்க்ககாலில்  இறந்தவர்களை வைத்து  பிழைப்பு நடத்துகின்ற  ஒரு செயலாகவே கருதவேண்டும்.

29abc770-269b-4992-86ea-e7646ef98a0e

Share.
Leave A Reply

Exit mobile version