சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்றவர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு போர்க்குற்றவாளி என்றும், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

london-demo-2

2009ஆம் ஆண்டு மே மாதம், பெருமளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் சி்றிலங்காவின் பதில் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேன கடமையாற்றியிருந்தார் என்ற வகையில், போர்க்குற்றங்களுக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

 ……………………………………………………..
(புலிக்கொடி தூக்காமல்  முதன்முறையாக   சிறிலங்கா  அரசுக்கு  எதிராக  ஈழத்தமிழர்கள் ஒரு  ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

பிரித்தானியத் தமிழர் பேரவையினர் மைத்திரி  அரசுடன்  நல்ல உறவில் உள்ளார்கள் என்பது  யாவரும்  அறிந்ததே.  அடிக்கடி மங்கள சமரசிங்க, சுமந்திரன்  போன்றோரை   சந்தித்தித்து  தங்களின்  முழு ஆதரவை   மைதிரி  அரசுக்கு  வழங்கிக்கொண்டிருப்பவாகள்.

அப்பிடியிருக்க  மைத்திரிக்கு  எதிராக  ஏன்  இந்த ஆர்ப்பாட்டம்??    சும்மாதான்.  நாங்களும்  இருக்கிறோம்  என்று  புலம்பெயர் தமிழர்களுக்கு  படம்காட்டுகின்ற  வேலைதான்.)

அனேகமாக,   லண்டன்  வந்திருக்கும்  மைத்திரிபால சிறிசேனவுடன்    பிரித்தானியத் தமிழர் பேரவையினர்  இரவு விருந்துபசாரம் மேற்கொள்வார்கள்  என  எதிர்பார்க்கிறோம்.  அதனால்தான் புலிக்கொடியை  தவிர்த்திருப்பார்கள் என நம்பலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version