திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்டம் சாமஸ் பிரிவில் கொட்டகலை பகுதியிலிருந்து மேபீல்ட் பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (13.05.2016) வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பயணிகளை ஏற்றிச்சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேனில் 9 பேர் பயணித்துள்ளதாகவும், 9 பேரும் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மாணவர்களும், 9 வயதுடைய சிறுமி மற்றும் இரண்டு முதியோர், நான்கு ஆண்கள் அடங்களாக 9 பேர் பயணித்துள்ளமை குறிப்பிடதக்கது.