தெலுங்கில் முன்­னணி நாய­கி­யாக வலம்­வந்­தாலும் சென்னை பேச்­சையும், அவ­ரு­டைய நட்பு வட்­டத்­தையும் இன்னும் மறக்­க­வில்லை சமந்தா. சமந்தாவிடம் பேசி­ய­தி­லி­ருந்து…

சென்­னையில் உங்­களை எந்­த­வொரு திரைப்­பட நிகழ்ச்­சி­க­ளிலும் காண முடி­ய­வில்­லையே?

உண்­மைதான். மே மாதத்தில் 6 ஆ-ம் திகதி ‘24′, 13 ஆ-ம் திகதி ‘ஆ ஆ’, 20- ஆம் திகதி ‘பிரம்­மோற்­சவம்’ ஆகிய படங்கள் வர­வி­ருக்­கின்­றன. ஆகையால் அடுத்­த­டுத்துப் பட வேலைகள் என ஓடிக்­கொண்டே இருக்­கிறேன்.

அத­னால்தான் சென்­னைக்கு வந்து போக முடி­ய­வில்லை. ஹைத­ரா­பாத்தில் நடை­பெற்ற ‘தெறி’, ‘24′ ஆகிய படங்­களின் விழாக்­களில் கலந்­து­கொண்டேன். சென்­னைக்கு வர முடி­யா­ததில் வருத்­தம்தான்.

என் வீடு ஹைத­ரா­பாத்தில் இருந்­தாலும், சென்­னைக்கு வரு­வது எனக்குப் பிடிக்கும்.

சத்யம் திரை­ய­ரங்கும், பெசன்ட் நகர் கடற்­க­ரையும் எனக்குச் சென்­னையில் விருப்­ப­மான இடங்கள். இப்­போதும் பல்­லா­வரம் நண்­பர்கள் மற்றும் என்­னு­டைய கல்­லூரி நண்­பர்­கள்தான் எனக்கு நெருக்­க­மா­ன­வர்கள்.

16630Samantha-Ruth-Prabhu-in-24-movie-(5)8994‘யு-டர்ன்’ படத்தின் தமிழ், தெலுங்கு மறு ஆக்­கங்­களில் நடித்து, தயா­ரிக்­கவும் போகி­றீர்­க­ளாமே?

பெங்­க­ளூ­ரு­க்குப் போய் ‘யு-டர்ன்’ படத்தைப் பார்த்­தது உண்மை. பிடித்­தி­ருந்­தது, ஆகையால் நடிக்­கிறேன். ஆனால், அந்தப் படத்தை நான் தயா­ரிப்­ப­தாக வந்த செய்­தியில் உண்மை இல்லை.

நடிப்புத் துறையில் இலக்கு ஏதா­வது வைத்­தி­ருக்­கி­றீர்­களா?

இனிமேல் நல்ல கதா­பாத்­தி­ரங்கள் இருக்கும் கதை­க­ளையே தெரிவு செய்து நடிக்கத் தீர்­மா­னித்­தி­ருக்­கிறேன்.

சும்மா பாடல்­க­ளுக்கு மட்டும் கவர்ச்சியாக வந்­து­விட்டுப் போவதில் விருப்பமில்லை. அப்­படி நல்ல கதைகள் எனக்கு வர­வில்லை என்றால் வீட்டில் இருப்பேன்.

முன்­னணி நடி­கர்­க­ளு­டைய படங்­களில் மட்­டுமே நாய­கி­யாக நடிக்­கி­றீர்­களே?

அப்­படி எந்­த­வொரு படத்­தையும் நான் ஒப்­புக்­கொள்­வ­தில்லை. நான் ஒரு படத்­துக்கு ஒப்­பந்­த­மா­கும்­போது நடிகர் யார் என்று கேட்­ட­தில்லை. இயக்­குநர் யார் என்­ப­துதான் எனக்கு முக்­கியம்.

இப்­போ­து­கூட ‘வட­சென்னை’ படத்தில் ஒப்­பந்­த­மா­கி­யி­ருக்­கிறேன். எனக்கு மிகவும் சவா­லான படம்.

அந்தப் படத்தில் ஏற்­க­வி­ருக்கும் கதா­பாத்­தி­ரத்­துக்­காக வட­சென்­னையில் இருக்கும் குடிசைப் பகு­திக்குச் சென்று பயிற்சி எடுக்கப் போகிறேன். கண்­டிப்­பாகத் தமிழில் நீங்கள் வழக்­க­மாகப் பார்க்கும் சமந்­தாவை ‘வட­சென்னை’யில் காண முடி­யாது.

எனக்குச் சவால் நிறைந்த படங்­களில் நடிக்க ஆசை. நான் மிகவும் அழ­கான நடிகை, திற­மை­யான நடிகை என்று சொல்­லிக்­கொள்­ள­வில்லை.

ஆனால், கடி­ன­மாக உழைத்து நடிக்கும் முதல் 5 நடி­கை­களின் பட்­டி­யலில் நான் இருப்பேன் என நினைக்­கிறேன்.

தமிழ், தெலுங்குத் திரை­யு­லகில் உங்­க­ளுக்குப் போட்டி யார்?

நயன்­தா­ராதான் எனக்குப் போட்டி. பெண்­களை மையப்­ப­டுத்தி வரும் படங்­களில் நடிக்க எனக்கு ஆர்வமில்லை.

இது­வரை நான் நடித்த படங்கள் அனைத்­துமே மன­ரீ­தி­யான சவால்கள் நிறைந்­தவை. போட்டி இருந்­தாலும் அனை­வ­ருமே நண்­பர்­க­ளா­கத்தான் இருக்­கிறோம்.

ஒரு படத்தில் ஒரு நடிகை நன்­றாக நடித்­தி­ருந்தால், உடனே போன் செய்து பாராட்­டி­வி­டுவேன்.

‘இஞ்சி இடுப்­ப­ழகி’ படத்தின் கதா­பாத்­தி­ரத்­துக்­காக அனுஷ்கா தந்த உழைப்பு அலா­தி­யா­னது. ஒரு பெண்­ணாக அவ­ரு­டைய துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்­தி­ருந்­தது.

நீங்கள் நடத்­தி­வரும் தொண்டு நிறு­வ­னத்­துக்குத் தூண்­டுகோல் யார்?

என் அம்­மாதான். நான் நடி­கை­யாகும் முன்பு எங்­க­ளது குடும்பம் மிகவும் நடுத்­தர வர்க்­கம்தான்.

ஆனால், உதவி என்று யாரா­வது கேட்டால் எங்கள் அம்மா உடனே கொடுத்­து­வி­டுவார். நடுத்­தர வர்க்க குடும்­பத்துப் பெண்­ணாக ஆரம்­பித்துக் கடு­மை­யாக உழைத்து இந்த நிலையை அடைந்­தி­ருக்­கிறேன்.

உழைப்பு மட்­டு­மன்றி கட­வுளின் அருளும் முக்­கியக் காரணம். நான் நல்ல நிலை­மையில் இருந்தால் மட்டும் எனக்கு மகிழ்ச்­சியைத் தராது. பிறருக்கு என்னால் முடிந்த உதவி செய்வதன் மூலம் மட்டுமே எனக்கு மனநிம்மதி கிடைக்கிறது.

இந்தியில் நடிக்கத் தயங்குவது ஏன்?

தயக்கம் எல்லாம் இல்லை. தமிழ், தெலுங்கில் நடிக்கவே எனக்கு நேரமில்லை. சரியான வாய்ப்பு வரும் பட்சத்தில் எந்த மொழி என்றாலும் ஒப்புக்கொள்வேன்.

Share.
Leave A Reply

Exit mobile version