வங்காளதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளது. இதனால் பொது இடங்களில் தலைக்காட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
வங்காள தேசத்தை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவர் மோட்டார் பைக் டாக்சி டிரைவராக உள்ளார். இவரது மகள் பிதி அக்தர் (வயது 12). இவர் ஓநாய் நோய் என்று அழைக்கப்படும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்.
ஆனால் வளர வளர அவருடன் ரோமங்களும் உடல் முழுவதும் வளர தொடங்கியது. அத்துடன் அவரது ஊனும் வளர்ந்து வீங்கி காணப்பட்டது.
சிறுமிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் கூறுகையில் ‘‘உலகத்தில் நான்கு அல்லது ஐந்து பேர்தான் இதுபோன்ற விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்’’ என்றார்.
சிறுமியின் அறுவை சிகிச்சைக்காக அவரது பெற்றோர் நிதி உதவியை நாடியுள்ளார். பலர் உதவியும் அளித்துள்ளனர்.
பிதி இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறேன். நான் வளர்ந்து பெரியவளாகும் போது டாக்டராக விரும்புகிறேன்’’ என்றார்.