இந்தியாவின் உஜ்ஜெயின் நகரில் நடைபெறும் கும்பமேளாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட அனைத்துலக மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகானின் அழைப்பின் பேரில், இந்த நிகழ்வில், மைத்திரிபால சிறிசேனவும், இரா.சம்பந்தனும், விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் பிரகடனம் ஒன்றை இந்தியப் பிரதமருடன் இணைந்து சிறிலங்கா அதிபர் வெளியிட்டதுடன், உரையையும் ஆற்றினார்.
இந்த உரையில், பௌத்தம், இந்து ஆகிய இரண்டு மதங்களை உலகுக்குத் தந்த நாடு இந்தியா என்று அவர் புகழாரம் சூட்டினார்.
கும்பமேளா விழாவில்… (படங்கள்)
இந்தியாவின் மத்திய பிரதேச உஜ்ஜேனில் இடம்பெற்றுவரும் கும்பமேளா விழாவில், மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக இன்று (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மாநாட்டில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.