தனித் தமி­ழீழ நிலைப்­பாட்டை விட்டு தாம் நகர்ந்­து­விட்ட­தாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

தனித் தமி­ழீ­ழமே தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்­பாட்டை வலி­யு­றுத்­திய வட்­டுக்­கோட்டை தீர்மானத்தைவிட்டு வில­கி­விட்­ட­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து நேற்­று­முன்­தினம் இந்­தி­யாவின் மத்­தி­ய­பி­ர­தேச மாநிலம் உஜ்­ஜைனில் நடைபெற்ற கும்­ப­மேளா நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்த இரா.சம்­பந்தன் இந்­திய பத்­தி­ரி­கை­யான த இந்­து­வுக்கு வழங்­கிய நேர்காணலிலேயே இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­தி­ருந்த எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி,ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோர் பங்­கேற்­றி­ருந்த கும்­ப­மேளா நிகழ்வில் பங்­கேற்­றி­ருந்தார்.

இந்த நிகழ்­வை­ய­டுத்து இந்­திய தலை­வர்­க­ளையும் சந்­தித்து சம்­பந்தன் எம்.பி. கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் உட்­பட பெரும்­பா­லான தமிழ் கட்­சிகள் பிரிக்­கப்­ப­டாத இலங்­கைக்குள் தீர்வு காணப்­பட வேண்டும் என்ற இணக்­கப்­பட்­டிற்கு வந்­துள்­ளன.

அத்­துடன், தற்­போது இலங்­கையில் புதிய அர­சியல் சாச­ன­மொன்றை தயா­ரிக்கும் பணிகள் இடம்­பெ­று­கின்­றது. இதன்­போது தமிழ் மக்களின் தேசியப் பிரச்­ச­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­கான திட்டங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இதேவேளை, தமிழ் மக்களின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 40 ஆவது வருட தினம் நேற்று முன்தினமாகும். அன்றைய தினமே இந்த செவ்வியினை சம்பந்தன் எம்.பி. வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

13 இற்குள் சமஷ்டியை திணிக்கவே இந்தியா முயற்சி!!:  ஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் அழைப்புக்கு காரணம் கூறுகிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
16-05-2016

aaaaaaaaaaaaaaaaaaaபதி­ன்மூன்­றுக்குள் ”சமஷ்­டியை” வழங்க வேண்­டு­மென்­பதை திணிக்­கவே ஜனா­தி­ப­திக்கும் – சம்­பந்­த­னுக்கும் ஒரே நேரத்தில் இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­யு­மாறு இந்­திய அரசு அழைப்பு விடுத்­தது என குற்றம் சாட்டும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார, ஜனா­தி­பதி இந்­தி­யா­வையும், பிர­தமர் சீனா­வையும் சமா­ளிக்கும் ”ராஜ­தந்­தி­ரத்­தையே” அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பா அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எமது நாட்டை பிரிக்கும் நிகழ்ச்சி நிர­லி­லி­ருந்து இன்னும் இந்­தியா விடு­ப­ட­வில்லை. அதனை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

13 ஆவது திருத்­த­தி­லுள்ள காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களை வட­மா­காண சபைக்கு பெற்றுக் கொடுப்­பதே இந்­தி­யாவின் தேவை­யாகும்.

இத­னூ­டாக சமஷ்­டியை பெற்றுக் கொடுப்­ப­தற்­கான அடித்­த­ளத்தை போட்டு பின்னர் படிப்­ப­டி­யாக தமி­ழீழம் உரு­வாகும். இதற்­கான செயற்பா­டு­களை மேற்­கொள்­ளவும், இந்­தி­யாவின் தேவையை திணிப்­ப­தற்­குமே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், எதிர்க்­கட்சித் தலை­வரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான சம்­பந்­த­னையும் ஒரே நேரத்தில் இந்­தி­யா­விற்கு வர­வ­ழைத்­தனர்.

இதன் மூலம் இந்­தி­யாவின் தேவை­களை அர­சியல், பொரு­ளா­தார, சமூக ரீதியில் இலங்­கையில் நிலை நிறுத்திக் கொள்­ளப்­படும். சீனாவுட­னான இலங்­கையின் தொடர்­பு­களை இல்­லா­தொ­ழித்து இந்­தி­யாவின் ஆதிக்­கத்தை நிலை­நி­றுத்த முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது.

அதே­வேளை அர­சாங்கம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னூ­டாக சீனாவை சந்­தோ­ஷப்­ப­டுத்தும் அதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஊடாக இந்­தி­யாவை சந்­தோ­சப்­ப­டுத்தும் ராஜதந்திரத்தை முன்னெடுக்கின்றது.

இந்த ராஜதந்திரம் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்காது என்றும் டாக்டர். வசந்த பண்டார தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version