வவுனியாவில் கடந்த 48மணித்தியாளமாக தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.

உக்குளாங்குளம் பிரதேசத்தில் வீடுகளுக்கு வெள்ளம் சென்றதால் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

இவ் அனர்த்தங்கள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினை தொடர்பு கொண்ட போது,

வவுனியா பூவரங்குளத்தில் பாரிய மரம் முறிந்து விழ்ந்ததில் வவுனியா – மன்னார் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இது வரை வவுனியா மாவட்டத்தில் வேறு எவ்வித அனர்த்தங்களும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

வவுனியா குருமன்காட்டு குளம் வான் பாய்வதுடன் தொடர்ச்சியாக மழை நீடிக்குமானல் வவுனியாவிலுள்ள ஏனைய குளங்களும் வான் பாய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

31-7

Share.
Leave A Reply

Exit mobile version