q1சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்ளுவதற்காக நேற்று(16) திங்கள்கிழமை இரவு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப்பெண் ஒருவர் இன்று(17) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் பொது வைத்தியசாலையின் சத்திரச்சிகிச்சை பிரிவில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண் தலைமன்னார் ஸ்ரேசன் வீட்டுத்திட்ட குடியிருப்பைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான தமிழரசன் றோகினி(வயது-40) எனவும் குறித்த பெண் தலைமன்னார் வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராக கடமையாற்றுவதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்

தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த குறித்த பெண் தலைமன்னார் வைத்தியசாலையில் தனது கடமைகளை முடித்துக்கொண்டு தனக்கு சத்திர சிகிச்சையினை மேற்கொள்ள நேற்று(16) திங்கட்கிழமை காலை மன்னார் வைத்தியசாலைக்கு வருகைதந்து சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணிற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளுவதற்காக இன்று(17) செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சத்திர சிகிச்சை பிரிவிற்குள் உள்வாங்கப்பட்டார்.

பின் சத்திர சிகிச்சைக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

எனினும் குறித்த பெண்ணின் மரணம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற பதில்களை அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்ததாக உயிரிழந்த குறித்த பெண்ணின் உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனினும் காலை 10.30 மணியளவில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் நீண்ட நேரத்தின் பின் குறித்த பெண் உயிரிழந்த விடையத்தை அங்குள்ள பணியாளர்கள் பொறுப்பற்ற விதத்தில் தெரிவித்ததாக உறவினர்கள் விசனம் தெரிவித்தனர்.

எவ்வித பிரச்சினைகளும் இன்றி தலைமன்னார் வைத்தியசாலையில் தனது கடமைகளை முடித்துக்கொண்டு நேற்று(16) திங்கட்கிழமை காலை மன்னார் வைத்தியசாலைக்கு சென்று விடுதியில் தங்கி இருந்து தனது சத்திர சிகிச்சைக்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளார்.

-இந்த நிலையில் சத்திர சிகிச்சை நிலையத்தியனுள் நல்ல நிலைமையில் சென்ற குறித்த பெண் இரு மணி நேரங்களில் எவ்வாறு உயிரிழக்க நேரிடும் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தை கேள்விப்பட்ட மக்கள் வைத்தியசாலையினை சூழ்ந்து கொண்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்கள் ஒன்றினைந்து குறித்த சக பணியாளரின் மரணம் தொடர்பில் கேல்வி எழுப்பினர்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் சுமூகமற்ற நிலை ஏற்பட வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸாரின் உதவியை நாடினர்.பொலிஸார் மன்னார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பகுதியை சூழ்ந்து கொண்டனர்.

நீண்ட நேரத்தின் பின் உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் சத்திர சிகிச்சை நிலையத்தில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் போது அங்கு கூடியிருந்த மக்கள் சத்தமிட்டு கத்தினர்.எனினும் குறித்த பெண்ணின் மரணத்தில் தமக்கு சந்தேகம் இருப்பதாகவும்,சத்திர சிகிச்சை நிலையத்தில் பாரிய தவறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் தொடர்ச்சியாக மன்னார் பொது வைத்தியசாலையில் பல்வேறு விதமான பிரச்சினைகள் இடம் பெற்று வருகின்ற போதும் அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடத்து கொள்வதாகவும் அவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சட்டியுள்ளனர்.

எனினும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் உரிய விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.என மன்னார் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

q1-10

Share.
Leave A Reply

Exit mobile version