தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பது குறித்து நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 232 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளன.
அந்த வகையில் டைம்ஸ் நவ்-சீ ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் அ.தி.மு.க.வை உற்சாகமடையச் செய்துள்ளது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.
139 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. 78 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 17 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.
பா.ஜ.க.வுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.பி.பி. நியூஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தி.மு.க.வுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணி 132 தொகுதிகளையும், அ.தி.மு.க. 95 தொகுதிகளையும், பா.ஜ.க. ஒரு தொகுதியையும், பிற கட்சிகள் 6 தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
ஆனால், இந்த இரண்டு கருத்துக்கணிப்புகளையும் புறந்தள்ளும் வகையில் என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பில் மாறுபட்ட முடிவு வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. 110 தொகுதிகளிலும், தி.மு.க. கூட்டணி 109 தொகுதிகளையும் கைப்பற்றி இழுபறி ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும், பிற கட்சிகள் 15 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் அ.தி.மு.க. ஆட்சியை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுக்கு 89 முதல் 101 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், தி.மு.க. கூட்டணி 124 முதல் 140 இடங்கள் வரை பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வுக்கு 3 இடங்கள் வரையிலும், பிற கட்சிகள் 4 முதல் 8 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தோல்வியை தழுவும் வாய்ப்பு?
கருத்துக் கணிப்புகள்
நியூஸ் எக்ஸ் (News X)