முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களின் 7ஆம் ஆண்டு நிறைவு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் பல்கலைகழகத்தில் அனுஸ்டிக்கபட்டது.

யாழ் பல்கலைகழக அனைத்து பீட மாணவர் ஒன்றியம் யாழ் பல்கலைகழக தொழிற்சங்கம் மற்றும் ஆசிரிய பீடம் ஆகியவற்றின் எற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் இந்த நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் சுடரேற்றி இந்நிகழ்வு ஆரம்பிக்கபட்டது.

இதில் பெருந்திராளான மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த மக்களுக்காக மெழுகுவர்த்தி எற்றி அஞ்சலி செலுத்தினர்.

1858199195Jafவாகரையில் முள்ளிவாய்க்கால் நினைவு அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் மாணிக்கபுரம் ஆற்றங்கரையோரத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி பிரார்த்தனை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், திருகோணமலை மாவட்ட செயலாளர் கணேசப்பிள்ளை குகன், அம்பாறை மாவட்டத்திற்கான உப தலைவர் முருகேசு வரதராஜன், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிர் நீத்தவர்களின் ஆத்மாசாந்தி வேண்டி பூசைகள் இடம்பெற்றதுடன், ஈகச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Share.
Leave A Reply

Exit mobile version