விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை தொகுதியில் தேமுதிக-மக்கள் நல கூட்டணி முதல்வர் வேட்பாளரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தோல்வி அடைந்துள்ளார்.

இவர் 34060 ஓட்டுகள் மற்றுமே பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

உளுந்தூர்பேட்டை அதிமுக வேட்பாளர் குமரகுரு 81043 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர் வசந்தவேலு 76233 ஓட்டுகள் பெற்றுள்ளார். தேமுதிக மநகூ முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் 34060 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

பாமக வேட்பாளர் பாலு 20009 ஓட்டுகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 4810 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஜி.ஆர். வசந்தவேல் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் விஜயகாந்த் இருந்து வந்தார்.

ஆனால் நேரம் செல்ல செல்ல 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு கடைசியில் தோல்வியடைந்தார்.

இந்த தொகுதியில் விஜயகாந்துக்கு 3வது இடம்தான் கிடைத்தது 2006ம் ஆண்டுதான் முதல் சட்டசபைத் தேர்தலை விஜயகாந்த் சந்தித்தார்.

கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் சந்தித்த தேர்தல் அது. 234 தொகுதிகளிலும் அவரது கட்சி தனித்துப் போட்டியிட்டது. கணிசமான வாக்குகளைப் பெற்று பரபரப்பையும் ஏற்படுத்தியது.

தனது முதல் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் விஜயகாந்த்.

அடுத்து 2011ல் நடந்த தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் விஜயகாந்த். ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்றதோடு தேமுதிகவைச் சேர்ந்த 29 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்று எதிர்கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

உளுந்தூர்பேட்டை மூன்றாவது முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணி, தமகா உடன் இணைந்து முதல்வர் வேட்பாளராக களமிறங்கினார். இம்முறை உளுந்தூர்பேட்டை தொகுதியில் களமிறங்கினார்.

பலமான போட்டி

இந்த தொகுதியில் அதிமுக, திமுக, பாமக, நாம்தமிழர், பாஜக என பலமுனை போட்டி நிலவுவதோடு பலமான வேட்பாளர்களும் விஜயகாந்துக்கு எதிராக நிறுத்தப்பட்டனர்

விருத்தாச்சலம் வெற்றி
2006 சட்டசபை தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த்துக்கு 61,337 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்ற பாமகவின் கோவிந்தசாமிக்கு 47,560 வாக்குகள் கிடைத்தன.
ரிஷிவந்தியத்தில்

2வது வெற்றி 2011ல் நடந்த பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற விஜயகாந்த், இந்த முறை ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். காங்கிரஸ் கட்சியின் கடுமையான போட்டியையும் தாண்டி அதிமுக பலத்தால் அவர் எளிதான வெற்றியைப் பெற்றார்.

வாக்குகள் எவ்வளவு

ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த்துக்குக் கிடைத்த வாக்குகள் 91,164 ஆகும். எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கு 60,369 வாக்குகளே கிடைத்தன.

அதிமுக வெற்றி
உளுந்தூர்பேட்டை அதிமுக வேட்பாளர் குமரகுரு 81043 ஓட்டுகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் வசந்தவேலு 76233 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

மதிமுக வேட்பாளர் விஜயகாந்த் 34060 ஓட்டுகள் பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் பாலு 20009 ஓட்டுகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 4810 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விஜயகாந்த் 3வது இடம்
தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் வாக்குகள் 47,529 வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 3வது முறையாக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட விஜயகாந்துக்கு சங்கு ஊதி விட்டனர்.
அதிர்ச்சியில் தேமுதிகவினர்

தங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த்தை விட அதிமுக, திமுக முன்னிலை பெற்றிருப்பது மட்டுமல்லாமல், 3வது இடத்திற்கு விஜயகாந்த் தள்ளப்பட்டிருப்பது தேமுதிகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version