சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் பெய்து வரும் மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, நிலச்சரிவுகளில் சிக்கிய 134 பேர் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் நிலச்சரிவிலும், களனி கங்கை பெருக்கெடுத்து கொழும்பில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திலும் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நேற்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டு தீவிரமான தேடுதல், மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் கொழும்பின் கொலன்னாவ, வெல்லம்பிட்டிய,களனி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 20 ஆயிரம் பேர் நேற்று மீட்கப்பட்டனர்.

இந்த அனர்த்தங்களினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை414,627 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 306,773 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

களனி கங்கை நீர்மட்டம் நேற்று மீண்டும் அதிகரித்தால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு நூற்றுக்கணக்கான படகுகள் ஈடுபடுத்தப்பட்டன.

sri-lanka-flood-1

Share.
Leave A Reply

Exit mobile version