தெற்கு அமெரிக்கா கண்டத்தில் சிலி நாட்டில் ஆப்பிரிக்க சிங்கங்களை பாதுகாக்கும் காப்பகத்துக்குள் நுழைந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் இரண்டு சிங்கங்களை வனவிலங்கு காப்பக ஊழியர்கள் சுட்டுக் கொன்றனர்.

தெற்கு அமெரிக்கா கண்டத்தில் சிலி நாட்டில் ஆப்பிரிக்க சிங்கங்களை பாதுகாக்கும் காப்பகத்துக்குள் நுழைந்து தற்கொலைக்கு முயன்ற வாலிபரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் இரண்டு சிங்கங்களை வனவிலங்கு காப்பக ஊழியர்கள் சுட்டுக் கொன்றனர்.

சிலி நாட்டில் உள்ள சாண்டியாகோ நகரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் ஏராளமான ஆப்பிரிக்க சிங்கங்கள் இயற்கையான வனச்சூழலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நேற்று (சனிக்கிழமை) பார்வையாளர்களில் ஒருவராக இந்த காப்பகத்துக்கு வந்த ஒருவாலிபர், தனது ஆடைகளை எல்லாம் கழற்றி தூர எறிந்தார்.

அங்கிருந்த ஒருமரத்தில் கயிற்றை கட்டி, அந்த கயிற்றின் மறுமுனையை பிடித்தபடி, சிங்கங்கள் உலவிவரும் பகுதிக்குள் திடீரென்று குதித்தார்.

அவரது இந்த விபரீத தற்கொலை முயற்சியை கண்ட இதர பார்வையாளர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். தன்னை தேடிவந்த விருந்தை இரையாக்கிக்கொள்ள பாய்ந்துவந்த சிங்கங்கள் அந்த வாலிபரின்மீது பாய்ந்து தாக்கி, கீழேதள்ளி, கடித்துக்குதற தொடங்கின.

இதை கண்காணிப்பு கேமரா மூலம் கவனித்த பாதுகாவலர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். சிங்கங்களிடம் சிக்கி உயிருக்கு போராடிய வாலிபரை காப்பாற்றும்பொருட்டு துப்பாக்கிகளால் அவர்கள் சுடத் தொடங்கினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இரு சிங்கங்கள் உயிரிழந்தன. மற்ற சிங்கங்கள் வனப்பகுதிக்குள் தப்பியோடி விட்டன.

சாவின் விளிம்பில் இருந்து தப்பிவந்த அந்த வாலிபர் பலத்த காயங்களுடன் சாண்டியாகோ நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும், அவர் உயிர் பிழைப்பது கடினம் என அஞ்சப்படுகிறது.

மேற்கண்ட சம்பவத்தின் புகைப்பட தொகுப்புகள் வீடியோவாக வெளியாகியுள்ளது. அதைக்காண..,

Share.
Leave A Reply

Exit mobile version