ஆர்ஜன்டினாவில் நிகழ்ந்த காற்பந்தாட்ட போட்டியொன்றின் போது 23 வயதான மைக்கல் பெவ்ரே என்னும் வீரர் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக பரிதாபமான முறையில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த வீரர் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிரணி வீரரொருவரின் கால் முட்டியானது முகத்தில் பலமாக மோதியுள்ளது.

இதனால் காயமடைந்து கீழே விழுந்த குறித்த வீரனை எதிரணியின் வீரரொருவர் மீண்டும் தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தின் பின்னர் குறித்த வீரனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சைகள் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version