காலியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் நான்காம் தர மாணவிக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
சிறு குற்றம் இழைத்த மாணவிக்கு, வகுப்பிலுள்ள ஏனைய 44 மாணவிகளை அவரின் தலையில் குட்டுமாறு, வகுப்பாசிரியை பணித்துள்ளார்.
பயிற்சி நிலை ஆசிரியையினால் வழங்கப்பட்ட தண்டனையினால், குறித்த மாணவி பலவித உடல் உபாதைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தென்மாகாண கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களமும் சம்பவம் குறித்து தனி விசாரணை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.