அமெரிக்க அதிபர் பதவி காலம் முடிந்தவுடன் ஒபாமா வசிக்கவுள்ள புதிய பங்களாவின் பிரத்யோக படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது அமெரிக்காவின் அதிபராக இருக்கும் பாராக் ஒபாமாவின் பதவிக் காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடைகிறது.
இதனால் அவர் தற்பொது வசிக்கும் அமெரிக்க அதிபரின் மாளிகையை காலி செய்துக்கொண்டு, வெள்ளை மாளிகை அருகில் புதிதாக வாங்கியுள்ள 40 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவிற்கு குடிபெயரவுள்ளார்.
ஒபாமாவின் புதிய வீடு வாஷிங்டனில் கோடீஸ்வரர்களில் வசிக்கும் ராக் க்ரீக் பூங்கா பகுதியில் அமைந்துள்ளது.
இங்குதான் அமெரிக்காவின் முக்கிய தலைவர்கள், ராஜதந்திரிகளின் வீடுகள் அமைந்துள்ளது. இந்த பகுதி வெள்ளை மாளிகையில் இருந்து வெறும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சிகாகோவில் ஒபாமாவிற்கு சொந்தமாக வீடு உள்ளது என்றாலும், மகளின் படிப்பு முடியும் வரை குடும்பத்துடன் வாஷிங்டனில் வசிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.