ஷாருக்கான் மகன் இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தி நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன்கான் லண்டனில் படித்து வருகிறார். இவரது தங்கை சுஹானாவும் லண்டனில் ஒரு பள்ளியில் படிக்கிறார். ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம் மட்டும் மும்பையில் பெற்றோருடன் தங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் லண்டனில் படிக்கும் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன்கான், விருந்து நிகழ்ச்சி ஒன்றில் இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆர்யனுக்கு லண்டனில் தோழிகள் அதிகம். எனவே பார்ட்டிகளில் அவர் பங்கேற்கும்போது அந்த பெண்களுடன் நெருக்கமாக வலம் வருவது பெரிய விஷயமல்ல.
லண்டனில் படித்து வரும் இந்தி நடிகர்களின் பல வாரிசுகளும், பெண்களும், ஆர்யன்கானின் நெருங்கிய நண்பர்கள் தான் என்று இந்தி பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.