ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு சொந்தமுடைய பேஸ்புக் வலைதளத்தில் செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்ய இளம்பெண்கள் எங்களிடம் உள்ளனர் என்ற வகையில் வெளியாகியுள்ள விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு சொந்தமுடைய பேஸ்புக் வலைதளத்தில் செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்ய இளம்பெண்கள் எங்களிடம் உள்ளனர் என்ற வகையில் வெளியாகியுள்ள விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்களிடம் சிக்கும் நபர்களில் ஆண்களை கொடூர கொலை செய்து விடுகின்றனர்.  பெண்களை தங்களது தேவைக்கு பயன்படுத்தி கொள்கின்றனர் என பலமுறை செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கடந்த மே 20ந்தேதி பேஸ்புக் வலைத்தளத்தில் வெளியான ஒரு பதிவில், அடிமையை விலைக்கு வாங்க விரும்பும் அனைத்து சகோதரர்களுக்கும், இது 8 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பதிவை வெளியிட்ட நபர் தன்னை அபு ஆசாத் அல்மேனி என்ற ஐ.எஸ். போராளி என அடையாளப்படுத்தி உள்ளார்.

அந்த புகைப்படத்தில், 18 வயது கொண்ட இளம்பெண் ஒருவர் முகத்தில் கறுப்பு துணியால் மறைக்கப்பட்ட நிலையில் அமர்ந்துள்ளார்.

அந்த படத்திற்கு இடப்பட்ட தலைப்பு:  இவள் விற்பனைக்காக என்று உள்ளது.  இந்த புகைப்படம் வெளியான ஒரு சில மணிநேரங்களில், அதே நபர் மற்றொரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

அந்த படத்தில் அழுது கண்கள் சிவந்து வாடிய நிலையில் இளம்பெண் ஒருவர் காணப்படுகிறார்.  அதன் பதிவில், மற்றொரு சபீயா (அடிமை), இவளும் 8 ஆயிரம் அமெரிக்க டாலர்.  வேண்டுமா? அல்லது வேண்டாமா? என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவுகளை சில மணிநேரங்களில் பேஸ்புக் நீக்கி விட்டது.  இந்த பதிவினை, தொடர்புடைய நபர் விற்பனை செய்வதற்காக வெளியிட்டுள்ளாரா? அல்லது பிற போராளிகளால் பெண்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் வெளியிட்டுள்ளாரா? என்பது தெளிவாக தெரியவில்லை.

ஆனால் வழக்கத்தில் இல்லாத வகையில் வெளியான இந்த பதிவு, நூற்றுக்கணக்கான பெண்கள் செக்ஸ் அடிமைகளாக ஐ.எஸ். அமைப்பினரால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளது அதிகரித்து உள்ளது என்பது தெரிகிறது என்று தீவிரவாத எதிர்ப்பு நிபுணர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் குறிப்பிட்டு கூறியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version