நாட்டின் தற்­போ­தைய அர­சியல் குழப்­பங்­க­ளினால், ஐ.தே.க ஆட்­சியைப் பறி­கொ­டுத்­தி­ருந்­தாலும், பேரி­டி­யாக அமைந்­தது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குத் தான்.

பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எதிர்­காலம் இப்­போது, கேள்­விக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றது.

இன்னும் எவ்­வ­ளவு காலத்­துக்கு இந்தக் கட்­சி­யினால் தாக்குப் பிடிக்க முடியும் என்ற சந்­தே­கமும் தோன்­றி­யி­ருக்­கி­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு மாற்­றான கட்­சி­யாக இருந்து வந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி – இப்­போது, மூன்­றா­வது இடத்­துக்­காக போட்­டி­யிட வேண்­டிய நிலைக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது.

இதற்கு முக்­கி­ய­மான காரணம், மஹிந்த ராஜபக் ஷவும், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் தான். இவர்கள் இரு­வரும், இப்­போது, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை நடுத்­தெ­ரு­வுக்குக் கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

பண்­டா­ர­நா­யக்க காலத்தில் இருந்து, பண்டா குடும்­பத்தின் சொத்­தாக- அவர்­களின் பரம்­பரை வழி தலை­மையே இருந்து வந்­தது, சிறி­மாவோ, சந்­தி­ரிகா என்று பண்டா குடும்­பத்தின் வச­மி­ருந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் பத­வியை, மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யா­னதும், பிடுங்கி எடுத்துக் கொண்டார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90தனக்கு நெருக்­கடி கொடுத்து, மஹிந்த ராஜபக் ஷ எவ்­வாறு கட்­சியின் தலை­மையைப் பறித்­தெ­டுத்தார் என்று, பல ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் ஊடகப் பேட்­டி­களில் சந்­தி­ரிகா கண்­ணீ­ருடன் கூறி­யி­ருந்தார்.

தம்­மி­ட­மி­ருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மையைப் பறித்­தெ­டுத்த, மஹிந்த ராஜபக் ஷவைப் பழி­வாங்­கு­வ­தற்­காக சந்­தர்ப்பம் பார்த்­தி­ருந்தார் அவர். அதற்கு வாய்ப்பும் வந்­தது.

2014இல், திடீ­ரென ஜனா­தி­பதித் தேர்­தலை அறி­வித்த மஹிந்­த­வுக்கு, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­லா­ள­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, எதிர்க்­கட்­சி­களின் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்தி அதிர்ச்­சியைக் கொடுத்தார்.

அதன் தொடர்ச்­சி­யாக, மஹிந்த ராஜபக் ஷ தோற்­க­டிக்­கப்­பட்டார். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­னதும், மீண்டும் காட்சி மாறி­யது.

சந்­தி­ரி­கா­விடம் இருந்து எப்­படி சுதந்­திரக் கட்­சியின் தலை­மையை மஹிந்த ராஜபக் ஷ பறித்துக் கொண்­டாரோ, அது­போ­லவே, அவ­ரிடம் இருந்தும், அந்தப் பதவி பறிக்­கப்­பட்­டது. கட்­சிக்குள் மஹிந்த ராஜபக் ஷ ஓரம்­கட்­டப்­பட்டார்.

கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அவ­ருக்கு போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்பு கிடைக்­குமா என்ற சந்­தேகம் கூட ஏற்­பட்­டது.

வாய்ப்பு மறுக்­கப்­பட்டால், தான் தனிக்­கட்­சியை ஆரம்­பித்துப் போட்­டி­யி­டுவேன் என்று மிரட்­டிய பின்னர் தான், மைத்­தி­ரி­பால சிறி­சேன பணிந்து அவ­ருக்கு இட­ம­ளித்தார்.

மஹிந்த ராஜபக் ஷ பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்­றி­பெற்ற போதும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு போதிய பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை.

அந்தச் சந்­தர்ப்­பத்தில் மஹிந்த ராஜபக் ஷவை ஓரம்­கட்­டு­வ­தற்­காக, ஐ.தே.கவுடன் கூட்­டணி ஏற்­ப­டுத்தி, கூட்டு அர­சாங்­கத்தை அமைத்தார் மைத்­தி­ரி­பால சிறி­சேன.

அப்­போது, மஹிந்த ராஜபக் ஷ தனக்கு ஆத­ர­வான பெரும்­பா­லான எம்.பிக்­களை அழைத்துக் கொண்டு தனி அணி­யாக இயங்­கினார். பின்னர் அந்த அணியை பலப்­ப­டுத்தி கூட்டு எதி­ர­ணி­யாக மாற்­றினார்.

அதே­வேளை, தனது சகோ­தரர் பஷில் ராஜபக் ஷவைக் கொண்டு, பொது­ஜன முன்­னணி கட்­சியை உரு­வாக்­கினார்.

அந்தக் கட்­சியை உள்­ளூ­ராட்சித் தேர்­தலில், போட்­டி­யிட வைத்து, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை மூன்­றா­மி­டத்­துக்குத் தள்ள வைத்தார் மஹிந்த.

ஆனாலும் பொது­ஜன முன்­ன­ணியில் அவர் இணைந்து கொள்­ள­வில்லை. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் போச­க­ராக இருந்து கொண்டே, சுதந்­திரக் கட்­சிக்கு எதி­ராக காய்­களை நகர்த்­தினார்.

மஹிந்த ராஜபக் ஷ சுதந்­திரக் கட்­சியை விட்டு வெளி­யேறப் போகிறார், பொது­ஜன முன்­ன­ணியில் இணையப் போகிறார் என்று கடந்த காலங்­களில் பல­முறை செய்­திகள் வெளி­யா­கின.

ஆனால், அவர் அதனை நிரா­க­ரித்து வந்தார்.

தான் ஒரு­போதும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை விட்டு வெளி­யே­ற ­மாட்டேன்.

அதற்குத் துரோகம் செய்­ய­மாட்டேன் என்று பகி­ரங்­க­மாக சத்­தியம் செய்­தி­ருந்தார் மஹிந்த ராஜபக் ஷ .

அதே மஹிந்த ராஜபக் ஷ தான் இப்­போது, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்து வெளி­யேறி பொது­ஜன முன்­ன­ணியில் இணைந்­தி­ருக்­கிறார்.

தான் மாத்­தி­ர­மன்றி, சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்த பல­ரையும் கூடவே அழைத்துக் கொண்டு போயி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ கூட்டு எதி­ர­ணியில் இருந்­த­போது, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து கூட்டு அர­சாங்­கத்தின் அமைச்சர் பத­வி­களைப் பெற்­ற­வர்­களும் கூட இப்­போது, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை விட்டு வெளி­யே­றி­யி­ருக்­கி­றார்கள்.

இது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்குப் பெரும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷவை வைத்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைப் பலப்­ப­டுத்­தலாம் என்று அவர் கரு­தி­யி­ருந்தார்.

ஆனால் அதே மஹிந்த ராஜபக் ஷ, தனக்­கென, தனது குடும்­பத்­துக்­கென ஒரு கட்­சியை உரு­வாக்கிக் கொண்டு சென்று விட்டார்.

இப்­போது, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வெற்றுப் பல­கையும், கட்­சியின் மீது அதீத விசு­வா­சமும் கொண்ட சிலரும் தான் எஞ்­சி­யி­ருக்­கி­றார்கள்.

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டுவார் என்ற உறு­தி­மொ­ழியின் அடிப்­ப­டையில் தான், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பதவி கவிழ்க்­கவும், மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மிக்­கவும் மைத்­தி­ரி­பால சிறி­சேன நட­வ­டிக்கை எடுத்தார் என்று அர­சியல் வட்­டா­ரங்­களில் பொது­வான கருத்து நில­வு­கி­றது.

ஆனால், மஹிந்த ராஜபக் ஷவின் திடீர் நட­வ­டிக்­கை­யினால், எல்­லாமே குழப்­ப­ம­டைந்­தது, பொது­ஜன முன்­னணி அதன் மொட்டு சின்­னத்­தி­லேயே போட்­டி­யிடும் என்று அதன் பொதுச்­செ­ய­லாளர் அறி­வித்த போது, சுதந்­திரக் கட்­சியின் துமிந்த திசா­நா­யக்க, மஹிந்த அம­ர­வீர, சரத் அமு­னு­கம போன்­ற­வர்கள் கடும் குழப்­ப­ம­டைந்­தார்கள்.

அவர்கள் மொட்டு சின்­னத்தில் போட்­டி­யிட தயா­ராக இருக்­க­வில்லை. பசில் ராஜபக் ஷவோ மொட்டு சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தையே விரும்­பினார்.

நீண்ட இழு­ப­றி­க­ளுக்குப் பின்னர், மைத்­தி­ரியும் மஹிந்­தவும் சுதந்­திர பொது­ஜன முன்­னணி என்ற கூட்­ட­ணியில் இரு­கட்­சி­களும் போட்­டி­யி­டு­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. பொதுச் சின்­னத்தில் போட்­டி­யி­டவும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இந்த முடிவு நடை­மு­றைக்குச் சாத்­தி­யப்­பட்டால், அது, இரண்டு கட்­சி­க­ளுமே தமது முன்­னைய அறி­விப்­பு­களில் இருந்து பொய்த்து விடும்.

ஏனென்றால் அடுத்த தேர்­தல்­களில் சுதந்­திரக் கட்சி தனது சொந்த கை சின்­னத்தில் தான் போட்­டி­யிடும் என்று ஜனா­தி­ப­தியும், அந்தக் கட்­சியில் இருந்த அமைச்­சர்­களும் கூறி வந்­தனர்.

அது­போ­லவே, அடுத்து வரும் தேர்­தல்­களில் தாமரை மொட்டு சின்­னத்தில் தான் போட்­டி­யி­டுவோம் என்று மஹிந்த அணி­யி­னரும் கூறி­வந்­தனர். இப்­போது இவர்கள் இரு­வ­ருமே தமது சின்­னத்தை கைவிட்டு ஒதுங்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்தக் கட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மஹிந்த ராஜபக் ஷவின் பொது­ஜன முன்­ன­ணி­யுடன் இணைந்து போட்­டி­யிடும் முடிவை எடுத்­தாலும், சரி, தனித்துப் போட்­டி­யிட முடிவு செய்­தாலும் சரி, அது தற்­கொ­லைக்கு ஒப்­பா­னதே.

ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தனித்துப் போட்­டி­யிட்டால், மூன்­றா­மி­டத்­துக்கு தள்­ளப்­ப­டு­வது உறுதி. அதற்கு அப்பால் செல்லும் நிலை ஏற்­பட்­டாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.

பொது­ஜன முன்­ன­ணி­யுடன் கூட்­டணி அமைத்துப் போட்­டி­யிடும் போது, சுதந்­திரக் கட்­சியின் வேட்­பா­ளர்­களை மஹிந்த தரப்­பினர் திட்­ட­மிட்டு தோற்­க­டித்து விடு­வார்கள் என்ற அச்சம், அந்தக் கட்­சி­யி­ன­ரிடம் பர­வ­லா­கவே உள்­ளது.

அதனால் தான், மாவட்­டத்­துக்கு இரண்டு பேர் தமது கட்­சியில் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தையும், தேசியப் பட்­டி­யலில் ஏழு பேரை பாரா­ளு­மன்­றத்­துக்கு அனுப்ப வேண்டும் என்றும் மைத்­தி­ரி­பால சிறி­சேன பேரத்தை நடத்­தி­யி­ருக்­கிறார்.

ஆக, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எப்­ப­டி­யா­வது, பாரா­ளு­மன்­றத்தில் 40 பேரை­யா­வது உறுப்­பி­ன­ராகப் பெற்று விட வேண்டும் என்று கனவு காணும் நிலையில் தான் இருக்­கி­றது,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை விட்டு ஓடிப்போய், எதிர்க்­கட்­சி­களின் பொது வேட்­பா­ள­ராக நின்று ஜனா­தி­ப­தி­யா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், சுதந்­திரக் கட்­சிக்கு துரோகம் செய்­ய­மாட்டேன் என்று சத்­தியம் செய்த மஹிந்த ராஜபக் ஷவும், அந்தக் கட்­சியை நடுத்­தெ­ருவில் கொண்டு வந்து நிறுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

பண்­டா­ர­நா­யக்கா காலத்தில், ஐ.தே.கவை எதிர்த்து ஆட்­சியைப் பிடித்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, 1977 தேர்­தலில் வெறும் 8 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை மாத்­திரம் பெற்று படு­தோல்வி கண்­டது. அந்த படு­தோல்­வி­யிலும், சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்கா கட்­சியை கட்­டுக்­கோப்­புடன் காப்­பாற்றி வந்தார்.

1977 இல் ஏற்­பட்ட தோல்­வியில் இருந்து சுதந்­திரக் கட்­சியை 17 ஆண்­டு­க­ளாக சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கா­வினால், மீட்க முடி­ய­வில்லை.

ஆனாலும் கட்­சியை அவர் குலைய விட­வில்லை. சந்­தி­ரிகா குமா­ர­துங்க தான், 1994இல் அந்த தோல்­வியில் இருந்து சுதந்­திரக் கட்­சியை மீட்டு வெற்றிப் பாதைக்கு கொண்டு வந்தார்.

அவர் பிர­த­ம­ராக பத­வி­யேற்ற, பின்னர் ஜனா­தி­ப­தி­யா­கவும் இரண்டு தட­வைகள் இருந்தார். அதன் பின்னர், மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மை­யிலும், சுதந்திரக் கட்சிக்கு ஏறுமுகமாகவே இருந்தது.

சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக எதிரணியில் போட்டியிட எடுத்த முடிவு தான் மஹிந்தவையும், அவர் தலைமை தாங்கிய சுதந்திரக் கட்சியையும் மீண்டும் படுகுழிக்குள் தள்ளியது.

அப்போது விழுந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எப்போது மீண்டெடும் என்று எவராலும் எதிர்வுகூற முடியாது. ஏனென்றால், சுதந்திரக் கட்சியை மீண்டும் பழைய நிலைக்குக் கட்டியெழுப்பும் தலைமைத்துவம் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இலங்கை அரசியலில் பரம்பரை ஆதிக்கம் தொடர்பான விமர்சனங்கள் இருந்து வந்தாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையில், பண்டா குடும்பத்தின் தலைமையில் இருக்கும் வரையில், அதன் கட்டுக்கோப்பு குலையவில்லை என்பது உண்மை.

அதற்குப் பிந்தைய தலைவர்களாக வந்தவர்கள், கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்களாகவே வரலாறு அடையாளப்படுத்தப் போகிறது.

– சத்திரியன்

Share.
Leave A Reply

Exit mobile version