மறப்­பதும், மன்­னிப்­பதும் மனித இயல்பு. மனம் திருந்தி மன்­னிப்பு கேட்­ப­தாக அது அமைய வேண்டும். மனம் திருந்­தாமல் மன்­னிப்பு கோரு­வதை மனக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­ய­வர்கள் ஏற்­ப­தில்லை. ஏற்­றுக்­கொள்­ளவும் முடி­யாது.

வட­ப­கு­திக்கு அரசு முறை­ப் பயணம் செய்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாதிக்­கப்­பட்ட மக்­களை நோக்கி நடந்­த­வை­களை மறப்போம்; மன்­னிப்போம்; இணைந்து வாழ்வோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்­துள்ளார். உண்­மை­யான மனி­தா­பி­மா­னத்தின் அடிப்­ப­டையில் விடுக்­கப்­பட்ட அழைப்­பாக இதனைக் கருத முடி­ய­வில்லை.

ஏனெனில் மறந்து, மன்­னிக்க வேண்­டிய விட­யங்­களில் அல்­லது சம்­ப­வங்­களில் என்ன நடந்­தது, யார் யாரெல்லாம் பங்­கேற்­றி­ருந்­தார்கள் என்­பது தெரி­யாது. அவற்­றுக்கு யார் பொறுப்பு என்­பது இன்னும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. உண்மை கண்­ட­றி­யப்­பட்டு, நிலை­நி­றுத்­தப்­ப­ட­வு­மில்லை.

என்ன நடந்­தது என்ற உண்­மையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறிந்­தி­ருப்­ப­த­னால்தான், நடந்­த­வை­களை மறப்போம்; மன்­னிப்போம் என்று கூறி­னாரோ என்று சந்­தே­கிக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. மனித உரி­மை­களும் மனி­தா­பி­மான சர்­வ­தேச சட்­டங்­களும் மீறப்­பட்ட மண்ணில் நின்று பாதிக்­கப்­பட்ட மக்­களை நோக்கி அழைப்பு விடுத்­தி­ருப்­ப­தனால் இந்த சந்­தேகம் எழு­வதைத் தவிர்க்க முடி­யா­துள்­ளது.

பாதிப்­புக்கு உள்­ளா­கி­ய­வர்கள் நடந்த உண்­மை­களை அறிய வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நடந்­தவை நடந்­த­வை­யா­கவே இருக்­கட்டும். அந்த மர்­மங்­களை வெளிப்­ப­டுத்த வேண்­டிய அவ­சிய­மில்லை. அவற்றைப் அப்­ப­டியே புறந்­தள்­ளி­விட்டு, அடுத்தகட்­டத்தை நோக்கி நகர்வோம் என்­பதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நிலைப்­பாடு.

பாதிக்­கப்­பட்ட மக்­களை நோக்கி அவர் விடுத்­துள்ள இந்த அழைப்பை சாதா­ர­ண­மான அர­சியல் பிர­சா­ர­மாகக் கொள்ள முடி­யாது. ஏனென்றால், நாட்டின் பிர­தமர் என்ற ரீதி­யிலும் நாட்டின் இரு பெரும் அர­சியல் கட்­சி­களில் ஒன்­றா­கிய ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் என்ற ரீதி­யிலும் அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.

அடுத்­த­தாக இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற ஐ.நா­.வி­னதும், சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் வற்­பு­றுத்தல் கோரிக்­கைக்கு செவி­சாய்த்து, அவ­ரு­டைய அர­சாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையின் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருக்­கின்­றது.

அந்தப் பிரே­ர­ணையின் நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கு­ரிய பொறி­மு­றை­களை நிறுவிச் செயற்­படப் போவ­தாக அர­சாங்கம் ஐ.நா. மன்­றத்­தி­டமும் சர்­வ­தேச நாடு­க­ளி­டத்­திலும் உறுதி வழங்கி, அதற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

குறிப்­பாக உண்­மையைக் கண்­ட­றியும் கடப்­பாட்டை நிறை­வேற்­று­வ­தற்­காக ஓ.எம். பி. என்று அழைக்­கப்­ப­டு­கின்ற காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை அரசு ஏற்­க­னவே நிறுவி, செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. முதலில் இரண்டு வரு­டங்கள் கால அவ­கா­சத்தைப் பெற்­றி­ருந்த அர­சாங்கம் மேலும் இரண்டு வருட கால அவ­கா­சத்தை கோரி பெற்­றி­ருந்­தது.

அந்த கால அவ­கா­சமும் முடிந்­து­விட்­டது. ஆனால், நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கு இன்னும் எத்­த­னையோ நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டிய தேவை இருக்­கின்­றது. இந்த நிலை­மையில் மேலும் இரண்டு வருட கால அவ­கா­சத்தைப் பெறு­வ­தற்­கான முயற்­சிகள் அரச தரப்பில் மேற்­கொள்­ளப்­பட்டு, அதற்கு சாத­க­மான நிலைமை உரு­வா­கி­யி­ருப்­ப­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான், மறப்போம்; மன்­னிப்போம்; வாருங்கள் என்று பாதிக்­கப்­பட்ட மக்­களை நோக்கி அவர் அழைப்பு விடுத்­துள்ளார்.

வைர­லா­கி­யுள்ள அழைப்பு

hrzruமறப்போம்;மன்­னிப்போம்; வாருங்கள், என்ற பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அழைப்பு குறித்து கருத்து தெரி­விக்­கா­த­வர்­களே இல்லை என்று கூறு­ம­ள­வுக்கு நா­டளா­விய ரீதியில் அது முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது. எதிர்த்தும், ஆத­ரித்தும், கண்­டித்தும் கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

மறப்போம்;மன்­னிப்போம் என்­றதன் மூலம் நாட்டில் நடக்கக் கூடா­த­வைகள் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன என்­பதை பிர­தமர் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்றார். அதற்­கான ஒரு வாக்­கு­மூ­ல­மா­கவே அந்த இரண்டு சொற்­க­ளையும் அவர் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார் என்று பேரி­ன­வாதத் தரப்­பினர் மத்­தியில் முக்­கி­ய­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. இதனால், அவ­ருக்கு எதி­ராகக் கண்­ட­னக்­குரல் எழுந்­தி­ருப்­ப­தையும் காண முடி­கின்­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொய்­யு­ரைத்து, இரா­ணு­வத்­தினர் மீது குற்றம் சாட்­டி­யி­ருப்­ப­தாக குறிப்­பாக முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளரும் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வதில் பெரும் பங்­காற்­றி­ய­வ­ரு­மா­கிய கோத்­தபாய ராஜ­பக்.ஷ,

அவர் மீது சீறிப் பாய்ந்­துள்ளார்.

இரா­ணு­வத்­தினர் குற்றச் செயல்­களில் ஒரு­போதும் ஈடு­ப­ட­வில்லை. அவர்கள் விடு­த­லைப்­பு­லி­க­ளிடம் இருந்து தமிழ் மக்­களைக் காப்­பாற்­றி­யி­ருக்­கின்­றார்கள். இதற்­காக அவர்கள் தமது உயிரைப் பணயம் வைத்­தி­ருந்­தார்கள் என குறிப்­பிட்­டுள்ள கோத்­தபாய, இரா­ணு­வத்­தினர் போர்க்­குற்றம் புரிந்­தார்கள் என்ற அபாண்­ட­மாகப் பொய்­யு­ரைத்­துள்ள ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சிங்கள மக்கள் மன்­னிக்­க­மாட்­டார்கள். தேர்­தலில் உரிய முறையில் அவரை அவர்கள் தண்­டிப்­பார்கள் என்று சாப­மிடும் வகையில் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் முப்­ப­டை­க­ளையும் சேர்ந்த சில அதி­கா­ரி­களும், சிப்­பாய்­களும் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், இரண்டு பேருக்கு மரண தண்­ட­னையும் வேறு ஐந்து பேருக்குத் தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் தயா ரட்நா­யக்க, பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு முன்­னின்று உழைத்த முன்னாள் கடற்­படைத் தள­ப­தியைக் கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருப்­பதைக் கண்­டித்­துள்ளார்.

முன்னாள் விமா­னப்­படைத் தள­பதி எயார் மார்ஷல் ரொஷான் குண­தி­லக இன்னும் ஒரு படி மேலே சென்று அரச படை­களை எதிர்த்துத் தாக்­கு­தல்கள் நடத்­திய விடு­த­லைப்­பு­லிகள் மன்­னிக்­கப்­பட்­டு­விட்­டார்கள் என்றும், நாட்டில் நல்­லி­ணக்­கத்தைக் கட்டி எழுப்­பு­வதில் சிங்­கள மக்கள் தங்­க­ளு­டைய கடப்­பா­டு­களை சரி­யான முறையில் நிறை­வேற்­றி­யுள்­ளனர் என்றும், தமிழர் தரப்­பி­னரே பங்­க­ளிப்பு செய்ய வேண்­டி­யுள்­ளது என்றும் கூறி­யுள்ளார்.

நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பாட்டில் பந்து தமிழ் மக்கள் பக்­கமே உள்­ளது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனைத் தோற்­க­டிப்­ப­தற்கு, தமிழ் மக்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை வழங்க வேண்டும் என்றும், பிர­பா­க­ரனின் பிடியில் பண­யக்­கை­தி­க­ளாக இருந்த தமிழ் மக்­களை விடு­விப்­ப­தற்கு அவரைத் தோற்­க­டிக்க வேண்டும் என்ற இரண்டு சிந்­த­னைகள் இருந்­த­தா­கவும், தங்­களால் முன்­வைக்­கப்­பட்ட இரண்­டா­வது யோசனை ஏற்­கப்­பட்டு, பிர­பா­கரன் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தாகத் தெரி­வித்­துள்ள அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க, யுத்­தத்தில் இரு தரப்­பி­ன­ருமே பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தனால் முன்­னேறிச் செல்­வ­தற்கு மறந்து, மன்­னித்துச் செயற்­பட தமிழ் மக்கள் முன்­வர வேண்டும் என்று கூறி­யுள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் தனது பங்­கிற்கு இந்த விடயம் குறித்து கருத்து வெளி­யிடத் தவ­ற­வில்லை. இரா­ணு­வத்­தினர் குற்றம் புரிந்­தி­ருந்­தா­லும்­கூட, அவர்­களைத் தண்­டிப்­ப­தற்கு இட­ம­ளிக்­க­மாட்டேன் என்று அவர் அழுத்தி உரைத்­துள்ளார். நாட்டைப் பாது­காத்த தியா­கி­க­ளா­கிய படை­யி­னரை, தான் அதி­கா­ரத்தில் இருக்கும் வரையில் பாது­காப்பேன் என்று அவர் உறு­தி­படக் கூறி­யி­ருக்­கின்றார்.

இத்­த­கைய கருத்­துக்கள் இலங்­கையில் போர்க்­குற்­றங்கள் எதுவும் இடம்பெ­ற­வில்லை. அத்­த­கைய குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருந்­தாலும், அவைகள் தமிழர் தரப்­பி­னா­லேயே புரி­யப்­பட்­டன என்று நிலை­நி­றுத்­து­வ­தையே நோக்­க­மாகக் கொண்­டி­ருக்­கின்­றன.

ஆனால் இறுதி யுத்­தத்­தின்­போ­தும்­ சரி, அதற்கு முந்­திய காலத்­தி­லும்­ சரி, தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்­டத்தை அடித்து நொறுக்­கு­வதில் தீவி­ர­மாக இருந்த அர­சாங்­கங்­க­ளி­னாலும், அரச படை­க­ளி­னாலும், இனப்­ப­டு­கொ­லைக்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன, போர்க்­குற்றச் செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன என்­ப­தற்­கான சம்­ப­வங்கள் பல அரங்­கேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. இதனை வெறும் வாய்ப்­பேச்­சுக்­க­ளி­னாலும், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுடன் நல்­லு­றவை வளர்த்து, நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான போக்­கு­க­ளி­னாலும் ஒளித்து மறைப்­ப­தற்­கான முயற்­சி­களே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

சந்­தர்ப்­பங்கள் கோட்­டை­ வி­டப்­பட்­டுள்­ளன

நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு உறு­து­ணை­யாக இருந்து செயற்­பட்ட தமிழ் மக்­களின் நம்­பிக்­கையைத் தக்­க­வைத்து, அதனை வளர்த்துக் கொள்­வதில், நல்­லாட்சி அர­சாங்கம் தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் கிடைத்த அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளையும் கோட்­டை ­விட்­டுள்­ளது. இதனால் தமிழ் மக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தலை­வர்­க­ளா­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய இருவர் மீதும் நம்­பிக்கை இழந்­துள்­ளார்கள். அர­சாங்­கத்­தினால் தங்­க­ளுக்குத் தீர்வு எதுவும் கிடைக்­க­மாட்­டாது என்ற கார­ணத்­தினால், அவர்கள் சர்­வ­தே­சத்தை நம்­பி­யி­ருக்­கின்ற நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.

நல்­லாட்­சியை உரு­வாக்­கு­வ­தற்கு உறு­து­ணை­யாக நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி ஒத்­து­ழைத்துச் செயற்­பட்டு வந்த தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வர்­களும் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்­தி­ருப்­பதை வெளிப்­ப­டை­யாகக் கூறத் தொடங்­கி­விட்­டார்கள். யுத்த மோதல்­களில் ஈடு­பட்ட இரு தரப்­பி­ன­ருமே குற்றம் புரிந்­தி­ருக்­கின்­றார்கள் எனவே மறப்போம்; மன்­னிப்போம் என்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கூற்­றிற்கு தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன் சீற்­றத்­தோடு பதி­ல­ளித்­துள்ளார்.

மறக்­கவும் முடி­யாது; மன்­னிக்­கவும் முடி­யாது. குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்று தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு பற்றி கருத்து வெளி­யிட்ட கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

பிர­த­ம­ரு­டைய கருத்தை நிரா­க­ரித்­துள்ள அவர் இரா­ணு­வத்­தி­னரும் விடு­த­லைப்­பு­லி­களும் போர்க்­குற்றம் புரிந்­தனர் என்று ஒற்றைச் சொல்லின் மூலம் தப்­பி­விட முடி­யாது என்றும் மறப்போம்; மன்­னிப்போம் என்ற பேச்­சுக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம் என்றும் கூறி­யுள்ளார். ஐ.நா. தீர்­மா­னங்­க­ளின்­படி உண்­மைகள் கண்­ட­றி­யப்­பட்டு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்று தமது நிலைப்­பாட்டைத் தெரி­வித்­துள்ளார்.

இரு தரப்­பி­ன­ராலும் இறுதி யுத்­தத்­தின்­போது மனித உரி­மைகள் மீறப்­பட்­டன. எனவே, மறப்போம்; மன்­னிப்போம் என்று கூறி­யுள்­ளதன் மூலம், இரா­ணு­வத்­தி­னரால் யுத்தக் குற்றம் புரி­யப்­பட்­டி­ருக்­கின்­றது என்ற குற்­றச்­சாட்­டுக்­களை பிர­தமர் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்றார் என்ற ஒரு கருத்தும் நில­வு­கின்­றது.

ஆனால் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக பிர­த­ம­ராக இருந்து வரு­கின்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­திலும், இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்­வைக்­காண்­ப­திலும் காட்டி வந்­துள்ள அக்­க­றையும் கரி­ச­னையும் அவர் எத்­த­கைய அர­சியல் போக்கை கொண்­டி­ருக்­கின்றார் என்­பதை வெளிச்சம் போட்டு காட்­டி­யி­ருக்­கின்­றன.

நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­ப­தற்கும் உகந்த அர­சியல் சூழலை தேர்­தல்­களின் ஊடாகத் தமிழ் ­மக்­களே உரு­வாக்­கி­யி­ருந்­தார்கள். அர­சியல் ரீதி­யாக அந்த நன்­றிக்­க­டனைச் செலுத்த வேண்­டிய பொறுப்பு அவரைச் சார்ந்­தி­ருந்­தது. இன்னும் சார்ந்­தி­ருக்­கின்­றது. ஆனால், அந்தப் பொறுப்பை நிறை­வேற்­றா­விட்­டா­லும்­கூட, ஜன­நா­யக வழி­மு­றையைக் கடைப்­பி­டிக்­கின்ற ஓர் அர­சியல் தலைவர் என்ற ரீதி­யி­லும்­கூட அவர் தனது பொறுப்­புக்­களை உணர்ந்து செயற்­பட்­ட­தாக, அவ­ரு­டைய நட­வ­டிக்­கைகள் அமை­ய­வில்லை. தமிழ் மக்கள் கொண்­டி­ருந்த நம்­பிக்­கை­களைச் சித­ற­டிப்­ப­தற்கே அவ­ரு­டைய நட­வ­டிக்­கைகள் துணை புரிந்­தி­ருக்­கின்­றன.

தேர்­தலே இலக்கு

தமிழ் மக்கள் அர­சாங்­கத்தின் மீது இழந்­துள்ள நம்­பிக்­கையைக் கட்டி எழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் பிர­த­ம­ரினால் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. மாறாக, வரப்­போ­கின்ற தேர்­தலை இலக்கு வைத்து அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­களைத் துணை­யாகக் கொண்டு தமிழ் மக்­களின் ஆத­ரவைக் கட்டி எழுப்­பு­வ­தற்­கா­கவே மறப்போம்; மன்­னிப்போம் என்ற அவ­ரு­டைய கருத்து வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

வட­மா­கா­ணத்­திற்கு மூன்று நாள் விஜ­ய­மாக வருகை தந்­தி­ருந்த அவர் கவர்ச்­சி­க­ர­மான பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்கள் குறித்த தீர்­மா­னங்­க­ளையும் உத்­தேச நட­வ­டிக்­கை­க­ளுக்­கான கருத்­துக்­க­ளை­யுமே அவர் வெளி­யிட்­டி­ருந்தார்.

வட­மா­காண மக்கள் எதிர்­கொண்­டுள்ள எரியும் பிரச்­சி­னைகள் குறித்து, மற­தி­யாகக் கூட அவரால் எத­னையும் கூற முடி­ய­வில்லை.

படை­யி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டுள்ள தமது சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யே­று­வ­தற்­காக வீதி­யோ­ரத்தில் அமர்ந்து ஒரு வரு­டத்­திற்கும் மேலாகப் போராடிக் கொண்­டி­ருக்­கின்ற கேப்­பாப்­புலவு மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் குறித்து அவ­ரு­டைய கவனம் திரும்­ப­வில்லை.

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் உற­வி­னர்கள் அந்­தந்த மாவட்­டங்­களில் வீதி­யோரப் புழு­தியில் குளித்த வண்ணம் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக நடத்தி வரு­கின்ற போராட்­டங்கள் பற்றி அறிந்­தி­ருப்­ப­தாகக் கூட அவர் காட்­டிக்­கொள்­ள­வில்லை.

இந்து ஆல­யங்கள் அமைந்­துள்ள இடங்­களில் அடாத்­தாக உட்­பு­குந்து புத்தர் சிலை­களை நிறு­வு­கின்ற பௌத்த மத­ரீ­தி­யான ஆக்­கி­ர­மிப்­பினால் வட­ப­கு­தியில் கொதிப்­ப­டைந்­துள்ள நிலை­மைகள் குறித்து அவர் கவ­லை­கூட தெரி­விக்­க­வில்லை.

வன­ப­ரி­பா­லன திணைக்­களம், தொல்­பொருள் திணைக்­களம், வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம், கரை­யோர அபி­வி­ருத்­திக்குப் பொறுப்­பான திணைக்­களம் போன்ற அரச பொறி­மு­றைகள் காலம் கால­மாக மக்கள் குடி­யி­ருந்து வந்த காணி­க­ளுக்கு அத்­து­மீறி உரிமை கொண்­டா­டு­வதும், அவற்றில் அரச அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி மக்­களை இம்­சைக்­குள்­ளாக்­கு­வதும் அவ­ருக்குத் தெரி­யாத விட­யங்­க­ளா­கவே இருக்­கின்­றன.

மறப்போம் மன்­னிப்போம். . . . . . . . . .

பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு காண்­ப­தற்கே முன்­னு­ரிமை அளிக்க வேண்டும். காணி உரிமை, தொழில் உரிமை, வாழ்­வா­தார உரிமை, வாழ்­வியல் இருப்­புக்­கான உரிமை தொடர்­பி­லான பல­வேறு நிலை­மை­களில் அடிப்­படை உரிமை மீறல்கள் இடம்­பெற்­றுள்ள ஒரு சூழலில், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பற்றி பேசு­வதும், பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­கான வேலைத்­திட்­டங்கள் குறி­த்து வசீ­க­ர­மான அறி­வித்­தல்­களை வெளி­யி­டு­வதும் எந்த வகையில் மக்­க­ளு­டைய மனங்­களை வென்­றெ­டுக்க உதவும் என்­பது தெரி­ய­வில்லை.

இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் மொத்­தத்தில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பின்­னரும் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ள மக்­களை ஏமாற்­று­கின்ற நட­வ­டிக்­கை­யா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

போர்க் குற்­றங்கள் புரி­யப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதை உண்­மை­யி­லேயே உணர்ந்து, அவற்­றுக்குப் பிரா­யச்­சித்தம் காணும் வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ரமசிங்க தானே வலிந்து அவற்றை ஏற்­றுக்­கொண்டு, மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளுக்கு மன்­னிப்பு கோரும் வகையில் மறப்போம் மன்­னிப்போம் என்ற கருத்தை வெளி­யிட்­டி­ருப்­ப­தாக ஒரு பேச்­சுக்­காக வேண்­டு­மானால் எடுத்துக் கொள்­ளலாம்.

ஏனெனில் இத்­த­கைய சம்­பவம் முன்னரும் இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பாக 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான நாடளாவிய வன்முறைகள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கை என சுட்டிக்காட்டி, அதற்காக பல வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.

அந்த வன்முறைகள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றிருந்தது. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியிருக்கின்றார் என்றுகூட கொள்ளலாம்.

அத்தகைய எண்ணப்பாட்டிற்கு அமைவாக நல்லாட்சி அரசாங்கத்தில் உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதை இழுத்தடித்து, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் மேலும் அவர்களுடைய பிரச்சினைகளை அதிகரித்து அவர்களை இம்சைகளுக்கு உள்ளாக்கியுள்ள இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு வருங்காலத்தில் யார் மன்னிப்பு கோரப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

அது மட்டுமல்லாமல், காலம் காலமாக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்ற தமிழ் மக்கள் மீது நடத்தப்படுகின்ற அடக்குமுறைகளுக்கும் உரிமை மீறல்களுக்கும் அவ்வப்போது மறப்போம்; மன்னிப்போம் என்று மன்னிப்பு கோரிச் செயற்படுவது எந்த வகையில் நியாயமானது என்பது தெரியவில்லை.

இது நாங்கள்தான் பெரும்பான்மையானவர்கள், அதிகாரம் உடையவர்கள், நாங்கள் அவ்வப்போது அப்படித்தான் நடந்து கொள்வோம். நீங்கள் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து எங்களுடன் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அடாவடித்தனமான அன்புரிமையோடு கூறுகின்ற கூற்றாகவே மறப்போம்; மன்னிப்போம் என்பதைக் கருத வேண்டியுள்ளது.

வட­மா­காண மக்கள் எதிர்­கொண்­டுள்ள எரியும் பிரச்­சி­னைகள் குறித்து, மற­தி­யாகக் கூட அவரால் எத­னையும் கூற முடி­ய­வில்லை.

படை­யி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டுள்ள தமது சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யே­று­வ­தற்­காக வீதி­யோ­ரத்தில் அமர்ந்து ஒரு வரு­டத்­திற்கும் மேலாகப் போராடிக் கொண்­டி­ருக்­கின்ற கேப்­பாப்­புலவு மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் குறித்தும் அவ­ரு­டைய கவனம் திரும்­ப­வில்லை.

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட ்­டுள்­ள­வர்­களின் உற­வி­னர்கள் அந்­தந்த மாவட்­டங்­களில் வீதி­யோரப் புழு­தியில் குளித்த வண்ணம் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக நடத்தி வரு­கின்ற போராட்­டங்கள் பற்றி அறிந்­தி­ருப்­ப­தாகக் கூட அவர் காட்­டிக்­கொள்­ள­வில்லை.

இந்து ஆல­யங்கள் அமைந்­துள்ள இடங்­களில் பலவந்தமாக உட்­பு­குந்து புத்தர் சிலை­களை நிறு­வு­கின்ற பௌத்த மத­ரீ­தி­யான ஆக்­கி­ர­மிப்­பினால் வட­ப­கு­தியில் கொதிப்­ப­டைந்­துள்ள நிலை­மைகள் குறித்து அவர் கவ­லை­கூட தெரி­விக்­க­வில்லை.

வன­ப­ரி­பா­லன திணைக்­களம், தொல்­பொருள் திணைக்­களம், வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம், கரை­யோர அபி­வி­ருத்­திக்குப் பொறுப்­பான திணைக்­களம் போன்ற அரச பொறி­மு­றைகள் காலம் கால­மாக மக்கள் குடி­யி­ருந்து வந்த காணி­க­ளுக்கு அத்­து­மீறி உரிமை கொண்­டா­டு­வதும், அவற்றில் அரச அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி மக்­களை இம்­சைக்­குள்­ளாக்­கு­வதும் அவ­ருக்குத் தெரி­யாத விட­யங்­க­ளா­கவே இருக்­கின்­றன.

மறப்போம் மன்­னிப்போம். . . . . . . . . .

பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு காண்­ப­தற்கே முன்­னு­ரிமை அளிக்க வேண்டும். காணி உரிமை, தொழில் உரிமை, வாழ்­வா­தார உரிமை, வாழ்­வியல் இருப்­புக்­கான உரிமை தொடர்­பி­லான பல­வேறு நிலை­மை­களில் அடிப்­படை உரிமை மீறல்கள் இடம்­பெற்­றுள்ள ஒரு சூழலில், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பற்றி பேசு­வதும், பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­கான வேலைத்­திட்­டங்கள் குறி­த்து வசீ­க­ர­மான அறி­வித்­தல்­களை வெளி­யி­டு­வதும் எந்த வகையில் மக்­க­ளு­டைய மனங்­களை வென்­றெ­டுக்க உதவும் என்­பது தெரி­ய­வில்லை.

இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் மொத்­தத்தில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பின்­னரும் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­துள்ள மக்­களை ஏமாற்­று­கின்ற நட­வ­டிக்­கை­யா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

போர்க் குற்­றங்கள் புரி­யப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதை உண்­மை­யி­லேயே உணர்ந்து, அவற்­றுக்குப் பிரா­யச்­சித்தம் காணும் வகையில் பிர­தமர் ரணில் விக்­கி­ரமசிங்க தானே வலிந்து அவற்றை ஏற்­றுக்­கொண்டு, மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளுக்கு மன்­னிப்பு கோரும் வகையில் மறப்போம்; மன்­னிப்போம் என்ற கருத்தை வெளி­யிட்­டி­ருப்­ப­தாக ஒரு பேச்­சுக்­காக வேண்­டு­மானால் எடுத்துக் கொள்­ளலாம்.

ஏனெனில் இத்­த­கைய சம்­பவம் முன்னரும் இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பாக 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான நாடளாவிய வன்முறைகள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கை என சுட்டிக்காட்டி, அதற்காக பல வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.

அந்த வன்முறைகள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றிருந்தது. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியிருக்கின்றார் என்றுகூட கொள்ளலாம்.

அத்தகைய எண்ணப்பாட்டிற்கு அமைவாக நல்லாட்சி அரசாங்கத்தில் உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதை இழுத்தடித்து, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் மேலும் அவர்களுடைய பிரச்சினைகளை அதிகரித்து அவர்களை இம்சைகளுக்கு உள்ளாக்கியுள்ள இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு வருங்காலத்தில் யார் மன்னிப்பு கோரப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

அது மட்டுமல்லாமல், காலம் காலமாக அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்ற தமிழ் மக்கள் மீது நடத்தப்படுகின்ற அடக்குமுறைகளுக்கும் உரிமை மீறல்களுக்கும் அவ்வப்போது மறப்போம்; மன்னிப்போம் என்று மன்னிப்பு கோரிச் செயற்படுவது எந்த வகையில் நியாயமானது என்பது தெரியவில்லை.

இது நாங்கள்தான் பெரும்பான்மையானவர்கள், அதிகாரம் உடையவர்கள், நாங்கள் அவ்வப்போது அப்படித்தான் நடந்து கொள்வோம். நீங்கள் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து எங்களுடன் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அடாவடித்தனமான அன்புரிமையோடு கூறுகின்ற கூற்றாகவே மறப்போம்; மன்னிப்போம் என்பதைக் கருத வேண்டியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version