சென்னையில் பெண்ணிடம் செல்போன் பறித்த இரண்டு திருடர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு வாலிபர் உட்பட மூன்று பேரிடம், பைக்கில் வந்தஇருவர் செல்போனை பறித்துச் சென்றதாக புகார்கள் வந்தன.

சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பாத்திமா, சந்திரன் மற்றும் லட்சுமி ஆகியோரிடம் இந்த வழிப்பறிநடந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் ஆரோக்கியம்மாள் தலைமையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

102635_Cell Phone

சிசிடிவி காட்சிகளில் குற்றவாளிகளின் உருவம் தெளிவாக பதிவாகியிருந்தது. மேலும் ஒரே நாளில் மூவரிடம் செல்போன் பறித்தது ஒரே கும்பலைச்சேர்ந்தவர்களாக இருக்கலாம் என காவல்துறையினர் கருதினர்.

இதையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த அஜித் மற்றும் ஆவடியை சேர்ந்தசுந்தர்ராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று, இருவரும் ஒரே பைக்கில் சென்றபடிவழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

சிந்தாரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பாத்திமாவின் செல்போனை பறித்த இருவரும், பின்னர் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில்வேகமாக சென்று விட்டனர்.

பின்னர் அதே பகுதியில் உள்ள டேம்ஸ் ரோட்டில் நின்று கொண்டிருந்த லட்சுமியின் செல்போனையும், சிந்தாதிரிப் பேட்டை ஜங்ஷன் அருகே சந்திரனின் செல்போனையும் பறித்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இருவரிடமிருந்தும் செல்போன்கள் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Share.
Leave A Reply

Exit mobile version