தனியார் வகுப்பு ஒன்­றுக்கு  முன்னால் வித்­தி­யா­ச­மான தோற்­றத்­துடன் நட­மா­டிய மர்ம நபரை பிர­தேச வாசிகள் பிடித்து பரி­சோ­தனை செய்த சமயம் குறித்த நபர் அணிந்­தி­ருந்த  எண்­ணிக்­கையை பார்த்து அசந்து போன­துடன் பின்னர் அந்த நபரை  பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்த சம்­பவம் ஒன்று கம்­பளை பிர­தே­சத்தில் இடம் பெற்­றுள்­ளது.

நேற்றுக் காலை இடம்பெற்ற மேற்­படி சம்­பவம் குறித்து மேலும் தெரிய வரு­வ­தா­வது,  கம்­பளை நிதாஸ் மாவத்­தையில் அமைந்­துள்ள மேற்­படி  தனியார் வகுப்­பிற்கு முன்னால் நேற்று காலை  வித்­தி­யா­ச­மான தோற்­றத்­துடன்   நபர் ஒருவர் நட­மாடி திரி­வ­தனை அவ­தா­னித்த மாண­வர்கள் தற்­பொ­ழுது நாட்டில்  தோன்­றி­யுள்ள அச்­ச­மான சூழ்நிலை­யினை கருத்தில்கொண்டு இது குறித்து அங்­கி­ருந்த பிர­தேச வாசி­களின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தனர்.

maxresdefault

இதன்போது தனியார் வகுப்பு பொறுப்­பா­ளர்­களும் பிர­தேச வாசி­களும் இணைந்து குறித்த நபரை பிடித்து பரிசோதனை செய்­ததில் அந்த  நபர் பெண்கள் அணியும் 13  உள்­ளா­டைகள் மற்றும் அரைக்­காற்­சட்­டைகள்  இரண்டு முழு காற்­சட்­டைகள் இரண்டும் அணிந்­தி­ருந்­த­மையை கண்டு திகைப்­ப­டைந்­த­துடன் பின்னர் குறித்த நபரை கம்­பளை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்

இந்த நபர் குறித்து பொலி­ஸா­ரிடம் நாம் தொடர்பு கொண்டு  கேட்ட போது, இவர்  கெலிஓயா பிர­தே­சத்தைச் சேர்ந்த மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான 35 வயது நப­ரெ­னவும் அவரை விசாரணைகளின் பின்னர் அவரின் மனைவியை அழைத்து எச்சரித்து அவரிடம்  ஒப்படைத்ததாகவும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version