தன்னாட்சி என்ற பொருள்படும்படி ஏ.ஆர் ரஹ்மான் இன்று வெளியிட்ட நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Tamizh is spreading in Punjab https://t.co/VU9q17c9e5
— A.R.Rahman (@arrahman) June 2, 2019
இதனையடுத்து, இந்தி கட்டாயம் அல்ல என்றும் விருப்பப்பாடமாக தேர்வு செய்யலாம் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை அறிக்கையில் திருத்தம் செய்தது.
இதற்கும் ரியாக்ட் செய்த ஏ.ஆர் ரஹ்மான் ”அழகிய தீர்வு தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல… திருத்தப்பட்டது வரைவு!” என்று ட்வீட் செய்திருந்தார்.
அழகிய தீர்வு ”தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல… திருத்தப்பட்டது வரைவு!”
— A.R.Rahman (@arrahman) June 3, 2019
இந்நிலையில், திடீரென தன்னாட்சி என்று பொருள்தரக்கூடிய AUTONOMOUS என்ற வார்த்தையை பகிர்ந்து, கேம்ப்ரிட்ஜ் ஆங்கில அகராதியில் அதற்கான விளக்கம் என்று அதன் இணைப்பையும் ட்வீட் செய்துள்ளார்.
AUTONOMOUS | meaning in the Cambridge English Dictionary https://t.co/DL8sYYJqgX
— A.R.Rahman (@arrahman) June 4, 2019
ஏ.ஆர் ரஹ்மானின் இந்த திடீர் ட்வீட் சமூக வலைதளங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அறிஞர் அண்ணா வலியுறுத்திய மாநில தன்னாட்சி உரிமையைத்தான் ஏஆர் ரஹ்மான் இப்போது குறிப்பிடுவதாக பலரும் கருத்துப் பகிர்ந்துள்ளனர்.
ஏஆர் ரஹ்மான் இந்த நேரத்தில் தன்னாட்சி பற்றிப் பேசியிருப்பது அவரது தைரியத்துக்கு சான்று. தமிழகம் போன்ற மாநிலங்கள் இப்போது தன்னாட்சிக்கான குரலை எழுப்ப வேண்டிய அவசியத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது என்று ரஹ்மானுக்கு ஆதரவாக பலரும் பேசி வருகின்றனர்.
ரஹ்மானின் இந்த ட்வீட் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.