ரிஷாத் பதியுதீன் அமைச்சர் பதவியை துறந்தமையை கொண்டாடும் முகமாக வவுனியா செக்கட்டிபிலவு கிராம இளைஞர்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

Vavunia-3
ரிஷாத் பதியுதீனால் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமமான சாளம்பைக்குளத்துக்கு அண்மித்தாக அமைந்துள்ள தமிழ்க் கிராமமான செக்கடிப்புலவு கிராமத்து இளைஞர்களே நேற்று (04) பொங்கி, இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதன் ஒரு கட்டமாக பம்பைமடு சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் இளைஞர்கள் ஒன்று திரண்டு பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் வீதியால் சென்றவர்களுக்கும் பொங்கல் கொடுத்து மகிழ்ந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த இளைஞர்கள், கடந்த காலங்களில் அமைச்சரினால் நாம் ஓரங்கட்டப்பட்டிருந்தோம்.

எமது கிராமங்கள் பூர்வீக கிராமங்களாக இருந்தபோதிலும் எமது கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் புதிதாக அமைக்கப்பட்ட சாளம்பைக்குளம் கிராமமே அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.

எமது கிராமத்தவர்கள் ஒதுக்கப்பட்ட நிலை காணப்பட்டது. இந்நியைலில், அவர் அமைச்சு பதவி துறந்ததனையடுத்து இனிவரும் காலங்களில் எமது தமிழ்க் கிராமங்களுக்கு விமோசனம் ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version