கிளிநொச்சிக்கு சென்றுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்னொன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை இன்று காலை அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமாரை அவரது அலுவலகத்தில் சந்திதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.