விமானம் புறப்பட்டு சென்ற போது அதிலிருந்த விமானியின் மனைவி,விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை பகல் 12.25 மணியளவில் ஏ.என்.32 ரக விமானம்,அசாம் மாநிலம் ஜோர்காட் நகரின் விமானப்படை தளத்தில் இருந்து,
அருணாசல பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. அதில் 8 விமானிகள், 5 பயணிகள் என 13 பேர் இருந்தனர்.
இந்நிலையில் பகல் 1 மணியளவில் சீன எல்லையில் உள்ள சியோமி மாவட்டத்தில் பறந்த போது திடீரென மயமானது.
பறக்கத் தொடங்கிய 33 நிமிடத்தில் ரேடார் கருவியில் இருந்து காணாமல் போனதால், விமானப் படை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
இதனிடையே விமானத்தை தேடும் பணி தற்போது முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், மாயமான விமானத்தில் சென்றவர்களில், ஹரியானாவை சேர்ந்த விமானி ஆசிஷ் தன்வார் என்பவரும் ஒருவர்.
கடந்த ஆண்டு தான் ஆசிஷிக்கும்,சந்தியாவிற்கும் திருமணம் நடந்துள்ளது.இருவரும் விமான படையில் தான் பணியாற்றுகிறார்கள்.
இதனிடையே திங்கட்கிழமை விமானம் புறப்பட போது,சந்தியா தான்,விமான போக்குவரத்து கன்ட்ரோல் ரூமில் இருந்துள்ளார்.
விமானம் மாயமானதை அடுத்து அவர் தான் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். விமானம் முதலில் தவறுதலாக சீன எல்லையில் தரையிறங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் தற்போது விமானம் மலையில் மோதியிருக்கலாம்,என வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக அவரது குடுபத்தினர் கவலை தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த மாதம் 2 ஆம் தேதி தான் ஆசிஷூம், சந்தியாவும் விடுமுறைக்காக வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.
26 ஆம் தேதி பாங்காக் சென்றுவிட்டு, அசாம் திரும்பிய நிலையில்,விமானம் மாயமான சம்பவம் அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.