ஹரியானாவில் 80 வயது மூதாட்டி ஒருவரை அவரது மருமகள் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகேந்திரகரில் உள்ள நிவாஸ் நகர் கிராமத்தில் வயதான மூதாட்டி ஒருவரும் அவரது மருமகளும் வசித்து வருகிறார்கள்.80 வயது மூதாட்டியான தனது மாமியாரை,சரிவர கவனித்து கொள்ளாமல் அவரை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று தனது மாமியார் என்றும் பாராமல் அவரை கொடுமையாக தாக்கியுள்ளார்.
இதனை அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசிக்கும்,டெல்லி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே வீடியோவை பார்த்த பலரும் மருமகளின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.
வயதானவர் என்று கூட பாராமல்,மூதாட்டியை கொடுமைப்படுத்தியது கடும் கண்டனங்களை கிளப்பியது.
அந்த பெண்ணிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.
இந்நிலையில் இந்த வீடியோ ஹரியானா முதலமைச்சர் பார்வைக்கு சென்றது.”இது போன்ற சம்பவங்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவும்,மூதாட்டியை தாக்கிய அவரது மருமகளிற்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தாக்குதல் நடத்திய பெண்ணை கைது செய்த காவல்துறையினர்,மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
Dear @mlkhattar
This video clip is from Niwaj Nagar village in the subdivision Narnaul of the Mahendragarh District in Haryana filmed by neighbours.This old woman is a proud Ex member of INA and get Rs 30000/- Govt pension who is regularly beaten by her Daughter in law.
Pls help pic.twitter.com/hJLJoMh2hc— Rishi Bagree (@rishibagree) June 7, 2019