ilakkiyainfo

கொட்டும் மழைக்கு மத்தியில் மோடியை வரவேற்றார் மைத்திரி

கொட்டும் மழைக்கு மத்தியில் மோடியை வரவேற்றார் மைத்திரி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கொட்டும் மழைக்கு மத்தியில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரவேற்றார்.

அதிபர் செயலகத்தை சற்று முன்னர் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, செங்கம்பள வரவேற்புடன் இராணுவ அணிவகுப்பு மரியாதைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கடும் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியப் பிரதமரை குடையுடன் வரவேற்று அழைத்துச் சென்றார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

இதையடுத்து. மதிய விருந்து மற்றும் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

modi-colombo-1

சிறிலங்காவில் வந்திறங்கினார் மோடி- வரவேற்றார் ரணில்

இந்தியப் பிரதமர் நரேநதிர மோடி குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

முற்பகல் 11.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு பி.737 விமானத்தில் வந்திறங்கிய இந்தியப் பிரதமரை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.

அதையடுத்து, மோட்டார் வாகன பவனியாக கொழும்பு சென்று கொண்டிருக்கிறார்.

பயணிக்கும் வழியில் சிறிலங்கா பிரதமருடன் ஒரே வாகனத்தில்,பயணம் செய்யும் போது தனியாக பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தியப் பிரதமருடன் 59 பேர் கொண்ட குழுவினரும் சிறிலங்கா வந்துள்ளனர். இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு மற்றும் மாற்றுப் பயன்பாட்டுக்காக, மற்றொரு பி-737 விமானமும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளது.

 

Exit mobile version